ஸ்டிக்கர் என்றாலே அரசியல்வாதிகள் ஒட்டும் ஸ்டிக்கர் தான் நினைவுக்கு வரும். ஆனால் இங்கே ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர் அந்த வகையறாவில் சேராது. ஸ்டிக்கர் ஒட்டியவரும் ஒட்டப்பட்டவரும் செம்ம க்யூட் வகையறா. அதனால் இந்த ஸ்டிக்கர் வீடியோ இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


வீடியோவைப் பாருங்கள் முதலில்..






வீடியோவில் ஸ்டிக்கர் ஒட்டுபவர் ஒரு குட்டிக் குழந்தை. குறும்புக் குழந்தை. ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்பவர் ஒரு ஜோடி லேப்ரடார் நாய். பொதுவாகவே கோல்டன் ரெட்ரீவர் மற்றும் லேப்ரடார் வகை நாய்கள் குழந்தைகளுடன் மிக நன்றாகப் பழகும் என்பார்கள். அதற்கு இந்த வீடியோவும் ஒரு சாட்சி தான். ஆம் குழந்தைகளிடம் நாய் எவ்வளவு பொறுமையாகப் பழகும் என்பதற்கு இந்த வீடியோவே ஆதாரம். 


வீடியோவில் இருப்பது ஒரு பெண் குழந்தை. அந்தக் குழந்தை தனது ஸ்டிக்கர் புக்கில் இருந்து ஸ்டிக்கர்களை எடுத்து தனது செல்லப் பிராணிகளின் மீது ஒட்டுகிறது. முதலில் ஒரு லேப்ரடார்  முழுமையாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு நிற்கிறது. அருகிலேயே இன்னொரு லேப்ரடார் நாய்க்குட்டி அமர்ந்திருக்கிறது. அதன் நெற்றியில் இருந்து குழந்தை ஸ்டிக்கர் ஒட்ட ஆரமிக்கிறது. ஆனால் குழந்தை ரொம்ப நியாயவான் போல.. ஏனெனில் அதன் நெற்றியிலும் கூட ஸ்டிக்கர் இரூக்கிறது.


இந்த வீடியோ பப்பீஸ்ஃபார்லைஃப் ‘puppiesforlif’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து இச்செய்தி பதிவு செய்யப்படும் வரை 9.7 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 78 ஆயிரம் லைக்ஸ் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் பகிர்ந்துள்ள பின்னூட்டங்களும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது குறித்து ஒரு நெட்டிசன், என் யோசனை எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டப்படும்போது அந்த செல்ல நாய்க்குட்டிகள் என்ன எண்ணிக் கொண்டிருந்திருக்கும் என்பதே என்று பதிவிட்டுள்ளார்.