வயது எதற்குமே தடையல்ல. 70 வயதில் கல்வி கற்கலாம், காதல் செய்யலாம், சாதனைகள் செய்யலாம் ஏன் இப்படி மைதானத்தில் கால்பந்து கூட ஆடலாம். கேரளாவைச் சேர்ந்த 64 வயது நபர் ஒருவர் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இருப்பவர் ஜேம்ஸ். அவருக்கு வயது 64. டிரக் ஓட்டுநராக பணிபுரிகிறார்.
அந்த வைரல் வீடியோவில் முதலில் யூடியூபர் பிரதீப் தோன்றுகிறார். அவர் தனது கால்பந்து வித்தையைக் காட்டுகிறார். நிச்சயமாக பார்க்க நன்றாகத் தான் இருக்கிறது. அதை முடித்துவிட்டு பாலை ஜேம்ஸுக்கு பாஸ் செய்கிறார். அந்த நொடி தான் ஹைலைட். பாலை லாவகமாக வாங்கும் விதத்திலேயே இதயங்களை அள்ளுகிறார் ஜேம்ஸ். அப்புறம் அதைவைத்து தோள், தலையால் தட்டி அசத்துகிறார்.
இந்த வீடியோவை பிரதீப் ரமேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் ஒரு கேப்ஷனையும் இணைத்துள்ளார். 64 வயதான அந்த நபருடன் கால்பந்து விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் வருமானத்துக்காக டிரக் ஓட்டுகிறார். ஆனால் டிரக்கில் ஃபுட் பாலையும் எடுத்துச் செல்கிறார். நேரமும் தோதான இடமும் கிடைத்தால் உடனே விளையாட ஆரம்பித்துவிடுகிறார். அவர் இளமைப் பருவத்தில் வயநாடு கால்பந்து அணியில் விளையாட ஆரம்பித்தார். இப்போதும் அவர் அந்த அணியில் இருக்கிறார். அவரிடம் நான் ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.
உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை நீங்கள் செய்யுங்கள். அதை சொல்வதற்கு ஓர் இனிமையான பாடல் இருக்கிறது. ஒரு நாள் நீங்கள் இந்த உலகத்தை விட்டு போய்விடுவீர்கள். அதனால் நீங்க நினைத்துப் பார்க்க ஏதுவாக சில ஞாபகங்களை சேர்த்து வையுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அதனால்தான் சொல்கிறோம், வயது எதற்குமே தடையல்ல. 70 வயதில் கல்வி கற்கலாம், காதல் செய்யலாம், சாதனைகள் செய்யலாம் ஏன் இப்படி மைதானத்தில் கால்பந்து கூட ஆடலாம்.