வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வாஸ்து டிப்ஸ் சில இருக்கின்றன.
ஒரு வீட்டின் பூஜை அறைதான் அதில் வாழும் அத்தனை பேருக்கும் நிம்மதிக்கும், நம்பிக்கைக்குமான புகலிடம். அங்கிருந்து நமக்கு வாழ்க்கைக்கான நேர்மறையான சக்தி கிடைக்க வேண்டுமென்றால் வாஸ்து சாஸ்திரத்தின்படி நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.
வாஸ்து சாஸ்திரம் சில டிப்ஸ்:
1. ஆண் பெண் தெய்வங்களை பிரித்துவைத்தல் கூடாது.2. பூஜை அறையில் மேல்கூரை தாழ்வாக இருக்க வேண்டும்.3. தெய்வங்களில் சிலைகளும் படங்களும் வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.4. 7 அங்குலத்திற்கும் அதிகமான உயரம் கொண்ட சிலைகளை வீட்டில் நிறுவக் கூடாது5. சிலைகளுக்கு எல்லா பக்கத்திலிருந்தும் நன்றாக வெளிச்சமும் காற்றோட்டமும் வர வேண்டும்.6. சிலைகள் வாயிலை நோக்கியோ அல்லது ஒன்றை நோக்கி மற்றொன்றோ இருக்கக் கூடாது. அது சக்திகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும்.7. பூஜை அறையில் இறந்தோரின் படமோ அல்லது ஓவியமோ இருக்கக் கூடாது8. பூஜைக்கு பித்தளைப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்9. விளக்குகள் கிழக்கு நோக்கி இருக்கட்டும்.10. சமையலறையிலும் கூட பூஜை அறையை அமைக்கலாம்11. பூஜை அறையில் வன்முறையை உணர்த்தும் படம் ஏதும் இருக்கக் கூடாது12. பூஜை அறை மரத்தால் ஆன கதவுகள் கொண்டிருந்தால் பூச்சி அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.13. பூஜை அறைக்கு வெள்ளை, வெளிர் மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்களை பூசலாம்14. பூஜை அறையில் எப்போதும் வெளிச்சம் இருக்க வேண்டும்.15. பூஜை அறை சுத்தமாக இருக்க வேண்டும்.16. 9 அங்குலத்திறகு அதிகமான உயரம் கொண்ட சிலைகள் கூடாது17. பூஜை அறையை மாடிப்படிக்கு கீழ் வைக்கக் கூடாது.