வெரிகோஸ் வெயின்(Varicose Veins) என்பது கால்களில்  இருக்கும் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனை ஆகும். இதயத்தில்  இருந்து  இரத்தம் உடல் முழுவதும் இரத்த குழாய்கள் வழியாக  செல்கிறது.கால்களுக்கு செல்லும் இரத்த குழாய்கள் மேல் நோக்கி இரத்தத்தை  கொண்டு செல்ல வேண்டும். கீழிருந்து மேல் நோக்கி செல்வதற்கு கெண்டை கால் தசைகள் உதவியாக இருக்கும். இந்த இரத்தம் மேல் நோக்கி செய்ய இயலாமல் இரத்த குழாய்களில் தேங்கி சுருண்டு இருக்கும். சுருண்டு தோலின் மேல் பகுதியில் காணப்படும். அதற்கு வெரிகோஸ் வெயின் என்று பெயர்.


                                             

                                  


வெரிகோஸ் வெயின் வருவதற்கு காரணங்கள் | Varicose Veins Reasons: 


நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்தல், உடல் பருமன், வயது , மரபணு குடும்பத்தில் யாருக்கேனும் இது  போன்ற வெரிகோஸ் வெயின் பிரச்சனை இருந்தால் உங்களுக்கும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.




வெரிகோஸ் வெயின் அறிகுறிகள் | Varicose Veins Symptoms:


தோலின் மேல் பகுதியின் இரத்த நாளங்கள் சுருண்டு காணப்படும், கால் வலி, முழங்காலுக்கு கீழே தான் இது போன்று இரத்த குழாய்கள் சுருண்டு காணப்படும். வீக்கம்,அரிப்பு, பாதங்களில் தாங்க முடியாத வலி போன்ற அறிகுறிகள் இருக்கும்.


சிகிச்சை முறைகள் | Varicose Veins Treatment:


காலில் பெல்ட் போட்டு  கொள்ளலாம்.




ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள், கருந்துளசி இலை , கற்றாழை, வசம்பு 4 இவை நான்கையும் மைய அரைத்து நரம்புகள் சுருண்டு இருக்கும் பகுதியில்  பூசவும். ஒரு மணி நேரம் கழித்து அவற்றை சுத்தமாக கழுவி விடவும். இது வீட்டில் செய்ய கூடிய கை வைத்திய முறையாகும்.


சில யோகாசன பயிற்சிகள் வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு சிறந்த  தீர்வாகும்.


கால்களுக்கு மசாஜ் செய்வது இந்த பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும்.




அறுவை சிகிச்சை முறைகள்  பரிந்துரைக்கப்படுகிறது


இது வரமால் தடுக்க ஆலோசனைகள்


நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று வேலை செய்யாமல், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது நேரம்  அமர்ந்து கால்களை தளர்வாக வைத்து விட்டு, பிறகு வேலையை தொடரலாம்.


உடல் எடையை  குறைக்க வேண்டும். டயட், உடற் பயிற்சி செய்து உடல் எடையை குறைப்பது வெரிகோஸ் வெயின் பிரச்சனை வராமல் தடுக்கலாம்.




மரபணு காரணமாக வெரிகோஸ் வெய்ன் பிரச்சனை வந்தால், முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


இந்த பிரச்சனையை  ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்து கொண்டால் சீக்கிரம் குணமாகும்.


நாளடைவில் இதை கண்டுகொள்ளாமல் விட்டால், சுருண்டு இருக்கும் இரத்த நாளங்களில் இரத்த சேர்ந்து ஒரு நிலையில் இரத்த நாளங்கள் வெடித்து  விடும். இதை தடுக்க ஆரம்ப நிலையில் சிகிச்சை எடுத்து கொள்ளலாம்.


எந்த சிகிச்சையாக இருந்தாலும், மருத்துவ ஆலோசனைக்கு பிறகு எடுத்து கொள்ள வேண்டும்.