காதலர் தின வார கொண்டாட்டம் தொடங்கியாச்சு. ’ரோஸ் தினம்’ முடிந்துள்ளது. அடுத்த வாரம் புதன்கிழமை (14,பிப்ரவரி,2024) காதலர் தினம். உலகமே காதலர் தின வாரத்தை கொண்டாட தொடங்கிவிட்டது. காதலர் தினத்திற்காக காத்திருக்கிறது. காதல் என்ற உணர்வு எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. நல்லது,கெட்டது, வெற்றி, தோல்வி என்றெல்லாம் இல்லை.காதல் என்ற உணர்வுடன் வாழ்வது என்பது மிகவும் மகிழ்சியானது என்பது எல்லோராலும் உணர்ந்துகொள்ள கூடியதே. காதலர் தினம் கொண்டாட்டம் வாரம் முழுவதும் இருக்கும். பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை.. ரோஸ் டே, ப்ரப்போஸ் டே, சாக்லெட் டே, (Chocolate Day) டெடி டே (Teddy Day), ப்ராமிஸ் டே (Promise Day), ஹக் டே(Hug Day), கிஸ் டே(Kiss Day) இதையெல்லாம் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி ’காதலர் தினம்’.
- ரோஸ் டே (Rose Day) - பிப்ரவரி,07.
- ப்ரப்போஸ் டே (Propose Day) - பிப்ரவரி,08.
- சாக்லெட் டே, (Chocolate Day) - பிப்ரவரி,09.
- டெடி டே (Teddy Day) - பிப்ரவரி,10
- ப்ராமிஸ் டே (Promise Day) - பிப்ரவரி,11.
- ஹக் டே(Hug Day) - பிப்ரவரி,12.
- கிஸ் டே(Kiss Day) - பிப்ரவரி,13.
- காதலர் தினம் (Valentine’s Day) - பிப்ரவரி -14
ரோஸ் தினம்
ரோஜா தினம் முடிந்துவிட்டது. இன்றைய நாளில் அன்பிக்குரியவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து அன்பை வெளிப்படுத்துவோம். சிவப்பு ரோஜா, இளஞ்சிவப்பு ரோஜா,வெள்ளை நிற ரோஜா,மஞ்சள் நிற ரோஜா உள்ளிட்ட பல வண்ணங்களில் ரோஜா பரிசாக கொடுக்கப்படும் நாளில் ‘ ரோஜா தினம்’ கொண்டாடப்படுகிறது.
ப்ரப்போஸ் டே
காதலர் தின வாரத்தில் இரண்டாவது நாள்.. ப்ரப்போஸ் டே. உங்களுக்குப் பிடித்தவர்களிடம், இவங்க வாழ்க்கை முழுவதும் ஒருவர் நம்ம கூடவே இருந்தா நல்லாயிருக்கும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்த.. டேட் செய்யலாமா? காதலிக்கலாமா? உங்களுடைய க்ரஷ்-டம் அவங்களை பிடிக்கும் என்பதை சொல்ல... இப்படி பிடித்தவர் மீதான உங்களின் உணர்வுகளை தெரிவிக்கும் நாள்.. ப்ரப்போஸ் டே. தயக்கமின்றில் உங்களது உணர்வுகளை வெளிப்படுத்துங்க. காதல் நிராகரிப்படும்போது அதை விருப்பத்தை தெரிவித்தது போலவே ஏற்றுக்கொள்ள பழகுவோம்.
சாக்லெட் டே
சாக்லேட் டே பிப்ரவரி-9-ம் தேதி ப்ரியத்திற்குரியவர்களுக்கு காதலுடன் சாக்லேட் கொடுத்து அவர்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவது என்றுகூட சொல்லலாம். சிறப்பனாக சாக்லேட் தேடிப் பிடித்து வாங்கி கொடுங்க.
டெடி டே
காதல் எப்படி வெளிப்படுத்துவது என தயக்கம் இருந்தால் டெடி பியர் வாங்கி கொடுத்து காதலை வெளிப்படுத்தலாம். காதல் இணையர் டெடி பொம்பை கொடுத்து அவர்களை இன்னும் எவ்வளவு பிடிக்கும் என்பதை சொல்லலாம்.
ப்ராமிஸ் டே
வாக்குறுதி / நம்பிக்கை அளிக்கும் நாள் இது. இருவரும் காதலில் இணைந்து வாழ்வோம் என்று வாக்குறுதி அளிக்கும் தினமாக இது அமைந்துள்ளது. உங்களின் கனவு உள்ளிட்டவற்றை பற்றியும் அவர்களிடம் மனம் விட்டு பேசலாம்.
ஹக் டே
ஒருவரையொரு இறுக அணைத்துக் கொள்தல் எவ்வளவு அன்பையும் பிணைப்பையும் ஏற்படுத்தும் என்று அறிவியல் ஆய்வுகள் நிறைய சொல்லும். அறிவியலுக்காக மட்டுமல்ல காதலின் முக்கியத்துவதையும் மகிழ்ச்சியுடனும் வாழ எவ்வளவு முறை கூட அணைத்துக் கொள்ளலாம்.
கிஸ் டே
காதல் இணையர் முத்தமிட்டு மகிழும் தினம் - கிஸ் டே. வார்த்தைகள் சொல்லாதவைகளை முத்தம் உணர்த்திவிடும் என்றே சொல்லாம்.
காதலர் தினம்
அதாங்க.. முக்கியமான நாள். பிப்ரவரி-14.. காதலர் தினம். கொண்டாடி மகிழும் நாள். இருவரும் ஒன்றாக பயணிப்பதை கொண்டாடும் நாள் என்றே சொல்லலாம். நீயும் நானும் சந்தித்தது முதல் வாழ்நாளில் இருப்பதே பெரும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது என்பதை இருவருமே பகிர்ந்துகொள்ளலாம். சிறப்பான நாட்களில் மட்டும்தான் காதலை கொண்டாட வேண்டும் என்பதில்லை. காதலில் திளைத்திருந்தால் எந்நாளும் கொண்டாட்டம்தான். ஆனால், ஒன்றை நினைவு கொள்ள வேண்டும் - புரிதல், உரையாடல், மெனக்கடல் எல்லாலும் முக்கியம்.
சுதந்திரம், அவரவர் தனிப்பட்ட ஸ்பேஸை மதித்தல் சுய மரியாதையோடு ஒருவரை அவராகவே கொண்டாடுவது, அடிமைத்தனம் இல்லாதது.. இதானே காதல்..
காதலர் தின வாழ்த்துகள்.. !