Valentines Day Wishes in Tamil: காதலர் தினம் உருவானதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனாலும் அதன் வரலாறு தெரியாமலே காதலர் தினத்தை கொண்டாடுவது, நமக்கு பிடித்த நபருடன் அந்த நாளை அவர்களுடன் கழிப்பது என்பது இன்றைய தலைமுறையினருக்கு அலாதிதான். ஆதாம் ஏவால் கதையில் தொடங்கி புறாவில் தூதுவிட்ட காலம் சென்று ஃபேஸ்புக் காலத்தையும் கடந்து, இன்ஸ்டா வாட்ஸ்-அப்பில் ஸ்டிக்கர் அனுப்பி அன்பை வெளிப்படுத்தும் இந்த காலம் வரை காதல் நிலைத்திருக்கிறது. அதை வெளிப்படுத்தும் விதம் மாறிவிட்டது என்றாலும் காதல் எப்போதும் காதலாகவே இருக்கிறது.
காதலர்களுக்கு ஒரு ரோசாப்பூ, கிரீட்டிங் கார்டு, சாக்லேட் என விதவிதமான பரிசுகளை நேரில் கொடுத்து மகிழ்ந்த, வெட்கப்பட்ட காலங்கள் ஒன்று உண்டெனில் தற்போது காலத்திற்கேற்ப செல்போனில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதும் ஒரு பேரன்பாக மாறிவிட்டது.
அதன்படி பேரன்புக்குரியவர்களுக்கான காதலர் தின ஸ்பெஷல் பதிவு, கவிதை, வாழ்த்துகளை இங்கு காணலாம். நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பி மகிழுங்கள். மகிழ வையுங்கள்.
ஒருவனைக் காதலி
உன்னை மட்டும் பிடிக்கிறது
உன்னை நான் நேசிக்கிறேன் என்று உலகின் எந்த மொழியிலும் சொல்வேன் இன்றே பிறந்த பிஞ்சு மொழியிலும் இன்னும் பிறக்காத ஒரு மொழியிலும் உன்னை நான் நேசிக்கிறேன் தமிழில்தான் சொல்ல வேண்டுமென்று கண்களிடம் கேட்க முடியுமா?
- ஜெ.பிரான்சிஸ் கிருபா
என் மனதில் என்றென்றும் நீ!
நவீன காதல்
காதலுடன் கிரிஞ் கலந்த போது..
எளிமையானது அன்பு. நடு ஆற்றில் அள்ளிய சிக்கல் இல்லாத தண்ணீர் போல..
-சுகுமாரன்
எனக்கான கவிதை நீ
காதலென்பது???
காதலென்பதுபுனைவுக்கும் அறியாமைக்கும் நடுவேநிறைய தர்க்கங்களை வைத்துச்செய்யப்பட்ட சாண்ட்விஜ்அவநம்பிக்கையின் குடிசையைவாஞ்சையாய் உரசும் பௌர்ணமிகாதலென்பதுரகசியமாய் எரிக்கப்படும்கறைபடிந்த உள்ளாடை
காதலென்பதுவெடிகுண்டு சுற்றும்போதுகாப்பாய் அணைத்துக்கொள்ளும் பெருமரம்பிரசவக்காரிக்கு மருந்தரைத்தகுழவி வாசனைகாதலென்பதுமீச்சிறு மலரின் தேனுக்குமண்டியிடும் டினோசர் பற்றிய கதை
காதலென்பதுதுரோகத்தின் வெறிக்கூத்தில்பரிமாறப்படும் ஊன்சோறுகுடுவை அமிலத்திற்குள் மிதக்கும்பாடம் செய்யப்பட்ட கரங்களின் அபிநயம்காதலென்பதுசாக்குருவியின் அகாலத்து வசைக்கூவல்
காதலென்பதுகாயங்களைக் கொண்டு குறிசொல்கிறவளின்கள்ளச்சிரிப்புபெருங்கடனாளியின் ஆழ்ந்த உறக்கம்பருவகாலங்களின் லயத்தில்நிகழும் உயிர்நெசவுகாதலென்பதுரத்தநாளங்களைச் சொடுக்கிசெய்யப்படும் தொல்சிகிச்சை
காதலென்பதுபஞ்சகாலத்தில் அடகுவைக்கப்படும்உழுகருவிகளின் துருஉடன் விற்கப்படும் குழந்தையின் கதறல்மனப்பிறழ்வுக்காரர்கள் கொளுத்திய தீயில்எரியும் தேன்கூடுகாதலென்பதுபடுக்கையறைகளில் நூற்றாண்டுகளாய்தீராதிருக்கும் தலைவலித் தைலம்
காதலென்பதுஆகோள் பூசலில் வீழ்ந்தோரது நடுகல்தேடிஏறுங்கொடியில் விரியும் வள்ளிப்பூநாதியற்றவளின் முந்தியில் தானாய் நிறைகிறகுளத்து அயிரைகள்காதலென்பதுகைதவறிச் செல்லும் வீடியோ அழைப்பில்வேற்றுகிரகவாசி தரும் முத்தம்
காதலென்பதுபாவமன்னிப்புக் கூண்டருகே கிடக்கும்முழந்தாள் பலகையின் தேய்மானம்முள்வேலிக் கம்பிகளால் முறுக்கிய கிடார்வறண்ட பூமியில் மேகங்களை வசியும் செய்யும்கூத்துக்காரர்களின் சாமத்து அடவுகாதலென்பதுகாவலற்றபகையாளியின் திராட்சைத் தோட்டம்
காதலென்பதுநெஞ்செலும்புகளை நொறுக்கும் இளவட்டக்கல்பாலுறுப்புகளைப் போன்ற மலர்களை கனிகளைகாணச் சமன்குலையும் வேதியியல்நறுக்கப்பட்ட மூக்கு, காது, நாக்கு மற்றும் தலைகள்காதலென்பதுமிருக மொழியிலான காவியம்
காதலென்பதுபூடகமான ஓவியத்தின் கீழ் இடப்பட்ட போலிக்கையெழுத்துகஞ்சாவுக்குச் சுருட்டப்படும் தற்கொலைக் கடிதம்காதலென்பதுவேட்டைநாய் கவ்விவரும் வகுளம்பூ
காதலென்பது...?
- வெயில்