காதலர் வாரம் தொடங்கிவிட்டது. ஒவ்வொருவரும் தங்கள் காதலர்களை கொண்டாடத் தயாராகி வருகிறார்கள். இந்த வாரம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் வாரத்தின் இரண்டாவது நாள், ப்ரோபோஸ் டேவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள் இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாள் எனச் சொல்லலாம். உங்கள் காதலருக்கு உங்கள் காதலைச் சொல்லுபவராக இருந்தால் இந்த நாள் உகந்தது. அதுவே உங்கள் காதலரிடம் இருந்து ப்ரோபோஸலை எதிர்பார்ப்பவர் என்றால் இந்த நாள் கொஞ்சம் நெர்வஸானதாக இருக்கும். ஒருவேளை அவர் ப்ரோபோஸ் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனப்பக்குவத்துடன் இருங்கள். ஒருநாள் உங்கள் வாழ்நாள் காதலை தீர்மானித்துவிடுவதில்லை தானே? 


காதலர் வாரம் பிப்ரவரி 7 அன்று ரோஜா தினத்துடன் தொடங்குகிறது. மக்கள் இந்த நாளில் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பூக்களை அளித்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். அடுத்த நாள் ப்ரோபோஸ் டே! உங்கள் காதலை கன்ஃபேஸ் செய்ய ஏற்ற நாள்...ஆனால் அதனை முறையாகச் செய்வது எப்படி? பார்ப்போம்...


மோதிரம் இல்லாமல் ப்ரபோஸ் செய்ய வேண்டாம். நீங்கள் உங்கள் கையால் செய்த சாக்லேட் கவர் மோதிரமாக இருந்தாலும் சரி..அது ஸ்பெஷல்தான்! ஆனால் மோதிரத்துடன் ப்ரபோஸ் செய்யுங்கள். 


உங்கள் சர்ப்ரைஸை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள்.


உங்களுக்கு என தனித்துவமான ஐடியா இருக்கட்டும். யாரையும் காப்பி அடிக்க வேண்டாம். 


உங்கள் திட்டத்தில் பெர்சனல் டச் இருக்கட்டும்.


ப்ரோபோஸ் செய்யும்போது ஒரு காலில் முட்டியிட்டு ப்ரோபோஸ் செய்யுங்கள். 


ப்ரோபோஸ் என்பது ஒவ்வொரு நபருடைய கனவு. அது உங்கள் நினைவில் இருக்கட்டும். அதற்கான சரியான இடத்தை தேர்ந்தெடுக்க மறக்க வேண்டாம்...


எப்படிச் சொல்வதாக இருந்தாலும் மூன்று விஷயம் கட்டாயம் இருக்கும். ரோஸ், சாக்கலேட், கிஃப்ட். இப்ப நாம இந்த வேலன்டைன்ஸ் டேவில் உங்கள் காதலுக்குரியவருக்கு கொடுக்கக் கூடிய கிஃப்டை பரிந்துரைக்கிறோம். நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


ஃப்ளோரல் நகைகள்:
பட்ஜெட் கம்மி, இது ஃப்ளோரல் டிசைன் நகைகள். டாடாவின் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் மியா என்ற பெயரில் இந்த ஃப்ளோரல் வகை நகைகளை அறிமுகம் செய்துள்ளது. அதுவும் இவை அறிமுகம் செய்துள்ள கம்மல் வகைகள் அட்டகாசம்.


The Alphabet Affair
அட பெயரே தூக்குதே என்று யோசிக்கிறீர்கள்தானே. ஆம், பெயர் சொல்லும்படி இது ஆங்கில எழுத்துக்களால் ஆன நகைகளின் கலெக்‌ஷன். குறிப்பாக செயினுக்கான டாலர் எனப்படும் பென்டன்டுகள். உங்கள் காதலி அல்லது காதலர் பெயரின் முதல் எழுத்து பென்டன்ட்டுடன் லவ் ப்ரோபோஸ் பண்ணிப் பாருங்களேன்.


ரிங் ஏ ஃப்ளிங்!
ரைமிங்கா இருக்குல. இதில் வருவது எல்லாம் மங்கள்சூத்ரா மோதிரங்கள். வடக்கே மங்கல்சூத்திரா என்றால் மாங்கல்யம். இந்த வகை மோதிரம் பெயர் ரைமிங்கா இருப்பது போல் கிஃப்டா கொடுக்க டைமிங்காகவும் இருக்கும். காதலைச் சொல்லும்போதே அது திருமணத்தில் தான் முடியும் என்ற உறுதியுடன் சொல்வது எவ்வளவு ஆழமானதாக இருக்கும்.