குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டதா?


குழம்பில் உப்பு அதிகமாகி விட்டால் உருளைக்கிழங்கை அதில் சேர்த்தால் உப்பு சரியாகி விடும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உருளைக்கிழங்கை சேர்ப்பது எல்லோருக்கும் பிடிக்காது. அப்படி உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் சிறிது கோதுமை மாவை எடுத்து பிசைந்து அதை சிறிய உருண்டையாக உருட்டி குழம்பில் சேர்த்து லேசாக கொதிக்க விட வேண்டும். பின் உப்பை சரி பார்த்தால் சரியான பதத்தில் இருக்கும். ஒருவேளை உப்பு மிகவும் அதிகமாகி விட்டால் உப்பின் அளவிற்கு ஏற்ப இரண்டு உருண்டைகளை சேர்த்து கொதிக்கவிட்டு, பின் அந்த உருண்டையை எடுத்துவிட வேண்டும். இப்போது உப்பு சரியான பதத்திற்கு வந்து விடும். 


சாம்பார் டிப்ஸ்


நாம் சாம்பார் செய்வதற்கு முதலில் பருப்பு வெங்காயம் தங்காளி ஆகியவற்றை  குக்கரில் வேக வைத்து எடுத்து தான் பின் சாம்பார் செய்வோம் . இனி இவற்றுடன் 10-இல் இருந்து 12 கறிவேப்பிலை இலைகளையும் சேர்த்து வேக வைத்து எடுத்து அதில் சாம்பார் செய்தால். வாயு ( gas trouble) பிரச்சனை ஏற்படாது என சொல்லப்படுகிறது. 


சிங்கில் அடைப்பு ஏற்படாமல் இருப்பதற்கு..


நாம் சிங்கில் கீரை பொடியாக நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றை கழுவிய தண்ணீரை ஊற்றும் போது, சிங்கில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் கீரை அல்லது காய் உள்ளிட்டவற்றை கழுவிய தண்ணீரை சிங்கில் வடிக்கும் போது மாவு சல்லிக்கும் பாத்திரத்தை பயன்படுத்தி வடிக்கலாம். இப்படி செய்வதால் உங்கள் சிங்கில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். 


கேஸ் சேமிப்புக்கு..


ஒரே நேரத்தில் முட்டை மற்றும் வேறு ஏதேனும் பருப்பு அல்லது கடலையை வேக வைக்க வேண்டும் என்றால் குக்கரில் தண்ணீர் சேர்த்து அதில் முட்டையை சேர்த்து விட வேண்டும். பின் ஒரு டிஃபன் பாக்சில் நாம் வேகவைக்கவேண்டிய கடலை அல்லது பருப்பை சேர்த்து அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பை விட சற்று குறைவாக உப்பை சேர்க்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் குறைவாக உள்ளதால் உப்பு அதிகமாகி விட வாய்ப்பு உள்ளது.  பின் டிஃபன் பாக்ஸை மூடி போட்டு முட்டை வைத்துள்ள அதே குக்கரில் வைத்து வழக்கம்போல் குக்கரை மூடி வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கேஸ் மிச்சம் செய்ய முடியும். மேலும் வேலை நேரமும் மிச்சமாகும்.