நம் வாழ்க்கை சூழல் மாறிவிட்டது. டிஜிட்டல் உலகில் ஆரோக்கியமான மனநிலை, உடல்நிலை பேணுதல் என்பது சவாலானதாக மாறிவிட்டது. ஒரு நாளில் ஸ்க்ரீன் நேரம் அளவோடு இருப்பதை உறுதி செய்வது என்பது பலருக்கும் டாஸ்க் -ஆக இருக்கிறது. அலுவலக பணி நேரத்திலும் தவிர்த்து ஸ்க்ரீன் நேரத்தை குறைப்பது என்பதற்கான வழிமுறைகளை பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.


அதிக ஸ்கிரீன் டைம் என்பது சாதாரணமாகிவிட்ட நிலையில், கழுத்து, முதுகு வலி, தசை பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை பலரும் எதிர்கொள்கின்றனர். இதற்கு ஆயுர்வேத மருத்துவர் வழங்கும் அறிவுரைகளை காணலாம். 


கழுத்து வலி:


லேப்டாப், கம்யூட்டர், மொபைல்போன், டி.வி. ஆகியவற்றை பயன்படுத்தும்போது Eye level - சரியாக இருக்குமாறு பார்த்துகொள்வது மிகவும் அவசியமானது. இது கண்களுக்கு ஆரோக்கியமானது. கழுத்து வலி ஏற்படாமல் இருப்பது இது உதவும்.


நாற்காலியில் உட்காரும்போது முதுகு. கழுத்திற்கு சப்போர்ட்டாக தலையணை எதாவது பயன்படுத்துவது உகந்தது.


நல்லெண்ணெய் சூடுபடுத்தி கழுத்திற்கு மசாஜ் செய்வது கழுத்து வலி ஏற்படுவதை தடுக்கும்.


இளஞ்சூடான நீரில் குளிப்பது தசைவலி உள்ளிட்டவற்றிலிருந்தும் விடுபடலாம்.


10-3-2-1-0 பார்முலா:


ஃபிட்னஸ் கோச் Martolia, நிம்மத்தியான தூக்கத்திற்கு சொல்லும் டிப்ஸ்கள் இவை; தூங்க செல்வதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு காஃபின் உணவுகளுக்கு நோ சொல்வது, தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவை சாப்பிடுவது, தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அலுவல் சார்ந்த பணிகளை 2 மணி நேரத்திற்கு முன்னதாவே முடித்து கொள்வது, படுக்கைச் செல்வதற்கு 1 மணி நேரம் முன்னதாகவே எல்க்ட்ரானிஸ் கேட்ஜட்களைத் தவிர்ப்பது, உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் நிம்மதியாக தூங்கலாம். இதை பழக்கமாகவும் மாற்றிகொள்ளலாம்.


தூக்கம் வராதது ஏன்? பாதிப்பு என்ன?


ஒழுங்கான வாழ்க்கை முறை இல்லாதது, சரியான உடல் இயக்கம் இல்லாதது ஆகியவற்றினால் தூக்கம் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, மொபைல் பார்ப்பது உள்ளிட்ட எல்க்ட்ரானிக் கேஜட்களைப் பார்த்துக்கொண்டிருந்தாலும் தூக்கம் வருவதில் சிக்கல்கள் இருக்கும். 


இரவு அதிகமாகச் சாப்பிட்டாலோ, அதிகமாக காரம், எண்ணெய்  உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டாலோ தூக்கம் பாதிக்கப்படும். ஏனெனில்,  உணவு செரிக்க அதிக நேரம் எடுக்கும்.செரிமானக்கோளாறுகள் ஏற்படும். மனதில் எதையாவது நினைத்து கவலைப்படுவது, மனஅழுத்தம், மன உளைச்சல் இருந்தாலும் தூக்கம் பாதிக்கப்படும். இவையெல்லாம் 'ஸ்லீப் ஆன்செட் இன்சோம்னியா' ஏற்பட முக்கியக் காரணங்கள்.


தொடர்ந்து தூக்க பிரச்சனைகள் இருப்பதால், இதயக் கோளாறு, பக்கவாதம், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம்,போன்ற மற்ற உடல்நலக்  கோளாறுகளும் ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி, ஹார்மோன் சுரப்பது பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


தீர்வுகள் 


சீரான உடற் பயிற்சிகள், சூரிய ஒளி உடலில் படுவது, தூங்குவதற்கு முன்பு டி.வி., மொபைல் பார்ப்பது உள்ளிட்டவற்றை தவிர்ப்பது, இரவு தூங்கச் செல்வதற்கு 3 மணிநேரம் முன்பாகவே சாப்பிடுவது என இப்படியான நடைமுறைகளை பின்பற்றுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். 


யோகா, தியானம் செய்யலாம். மனம் ரிலாக்ஸ் ஆகும்.


இரண்டு வாரங்களுக்கு மேலாக தூக்கம் சார்ந்த பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. 


சீரான தூக்க நேரத்தை பின்பற்ற வேண்டும். இரவில் சீக்கரம் தூங்கி, அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கி கொள்வது நல்லது.


மது பழக்கம் வேண்டாமே


மது அருந்து பழக்கம் இருப்பவர்கள் அதை விடவேண்டும். அப்படியானால் மட்டுமே நன்றாக தூங்க முடியும். 


மது பழக்கத்திற்கு அடிமையானால் தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 


தூங்குவதற்கு முன்பு அதிகமாக காபி, டீ குடிக்க கூடாது என்று பரிந்துரைக்கின்றன.


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.