திருப்பூர் மாநாகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் (NUHM) செயல்பட்டு வரும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • நகர சுகாதார செவிலியர்கள்

  • ஆய்வக நுட்புநர்

  • மருத்துவமனை பணியாளர் 


கல்வித் தகுதி:


செவிலியர்கள் பணிக்கு விண்ணப்பிக்க B.Sc. நர்சிங் / Auxillar Nurse Midwife Course , General Nursing and Midwife என்ற துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். 


ஆய்வக நுட்புநர் பணிக்கு ’Medical labaratory Technology துறையில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். 


மருத்துவமனை பணியாளர் பணிக்கு எட்டாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்



  • நகர சுகாதார செவிலியர்கள் - ரூ.14,000

  • ஆய்வக நுட்புநர் - ரூ.13,000

  • மருத்துவமனை பணியாளர் -ரூ.8,500


கவனிக்க..



  • பணியிடங்கள் மாறுதலுக்குட்பட்டது.

  • நேர்காணலில் தகுதி பெற்று காத்திருக்கு பட்டியலில் இருக்கும் நபர்களை 6 மாத காலத்திற்குள் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்யப்படும்.

  • முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

  • பணியின்தன்மையானது முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலான தற்காலிகப் பணியாகும்


தேர்வு செய்யப்படுவது எப்படி?


திருப்பூர் மாநகராட்சி சுகாதாரப் பிரிவில் காலை 10 மணிமுதல் மதியம் 3 மணிவரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதிவாய்ந்த நபர்கள் இந்த நேர்காணலில் தங்களது அசல் சான்றிதழ்கள், ஆதார் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் (2 எண்ணிக்கை) கலந்துகொள்ளலாம். 


தொலைபேசி எண் - 0421 -2240153


நேர்காணலின்போது கீழ்க்காணும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.



  • 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

  • கல்விச் சான்றிதழ்

  • தமிழ்நாடு மருத்துவ குழும பதிவு சான்றிதழ் 

  • ஆதார் அட்டை நகல்

  • குடும்ப அட்டை நகல் 


நேர்காணல் நடைபெறும் நாள் - 11.09.2023


நேர்காணல் நடைபெறும் இடம்


சுகாதாரப் பிரிவு


மாநகராட்சி அலுவலகம்


திருப்பூர்


******


தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre for Banana Trichy) உள்ள வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Young Professional 


கல்வித் தகுதி 


இதற்கு விண்ணப்பிக்க Agriculture / Horticulture / Biochemistry / Food Science and Nutrition உள்ளிட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பி.டெக். Food Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேனோசயின்ஸ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இந்தப் பணிக்கு தேவையான பணிக்கான துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பாகும்.


வயது வரம்பு:


இதற்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். கிடைக்கப்படும் விண்ணப்பங்களில் இருந்து தேர்வு செய்யப்படுவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு ‘ MS-WORD – TIMES NEW ROMAN FONT – 12 SIZE’ என்ற அளவில் சுயவிவர குறிப்பு, தேவையான சான்றிதழ் நகல், பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றுடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். 


மின்னஞ்சல் முகவரி - nrcbrecruitment@gmail.com 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 14.09.2023


https://nrcb.icar.gov.in/documents/Recruitment/2023/August/novel.pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரத்தை காணவும்