கடுமையான வெப்பம் இன்னும் தணிவதாக தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது பருவமழை பெய்ததால் காற்றில் கொஞ்சம் ஈரப்பதம் உள்ளது. எந்த பருவமாக இருந்தாலும் அது நம் சருமத்தை பாதிக்கத்தான் செய்கிறது. உடலின் மிக பெரிய உறுப்பு சருமம் தான். அது நம் உள் இருக்கும் உறுப்புகளை இயற்கையாகவே பாதுகாக்கிறது. எனவே அதை ஆரோக்கியமாக பராமரிப்பது நம்முடைய கடமை. இந்த பருவமழை தொடங்கவிருக்கும் சமயத்தில் தர்பூசணி எப்படிப்பட்ட நன்மைகளை வழங்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மேலும் சருமத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து ஃப்ரீ ரேடிக்கல் பாதுகாப்பையும் வழங்குகிறது. தர்பூசணி முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய செய்து சருமத்தை சீராக்கும். உங்களின் தினசரி உணவில் தர்பூசணியை சேர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அரை கப் பழச்சாறில் சிறிது ரோஸ் வாட்டர் தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து அதை முகத்திற்கு டோனராக பயன்படுத்துங்கள். மசித்த தர்பூசணி துண்டுகளுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் பச்சை பால் சேர்த்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். இது உங்கள் முகத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்