ஹனிமூன் என்பது பெரும்பாலான ஜோடிகளின் நினைவுச் சின்னங்களாக அமைபவை. காதலை மட்டுமின்றி, திருமணத்தையும் கொண்டாடுவதற்காகவே ஹனிமூன் பயணங்கள் செல்லப்படுகின்றன. ஹனிமூனை மிகச் சிறப்பாக கொண்டாட இந்தியாவில் ரொமாண்டிக் இடங்களைக் குறித்த தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம்.. 


இந்தக் கட்டுரையில் இந்தியாவில் உள்ள 5 ஹனிமூன் தலங்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கியுள்ளோம்.. 


1. அந்தமான் தீவுகள்



உங்கள் ஹனிமூனைக் கழிக்க மிகச் சிறந்த இடங்களுள் அந்தமான் தீவுகளும் உண்டு. இங்குள்ள ரொமான்டிக் தன்மையும், அட்வெஞ்சரின் மீதான பிரியமும் உங்கள் நினைவில் நீண்ட நாள்கள் வரை நீடிக்கும். இங்குள்ள நீல் தீவுகள், லிட்டில் அந்தமான், போர்ட் ப்ளேர் ஆகிய இடங்களின் கடற்கரைகள், ராதாநகர், ஹேவ்லாக் தீவு முதலான பகுதிகள் ஆகியவற்றின் இயற்கை எழிலுக்கும், அட்வெஞ்சர் விளையாட்டுகளுக்கும், கடற்கரை ரெசார்ட்களுக்கும் நினைவில் நீங்காத நினைவுகள் கொண்ட ஹனிமூனுக்கும் அந்தமான் சிறப்பான இடமாக அமையும். 



2. ஸ்ரீநகர்



இந்தியாவில் ரொமாண்டிக்கான இடங்களுள் ஸ்ரீநகர் மிக முக்கியமான ஒன்று. இங்குள்ள குளிர்ந்த வானிலை, அழகான இயற்கை எழில்மிக்க இடங்கள், அற்புதமான சூரிய அஸ்தமனக் காட்சிகள் ஆகியவை ஹனிமூனை மகிழ்ச்சிகரமான ஒன்றாக மாற்றுகிறது. பனிச்சறுக்கு விளையாட்டுகள், மலைப்பாதை வழியிலான ட்ரெக்கிங் நடைபயணம், ஜீலம் நதியின் படகு வீடுகளில் தங்குவது ஆகியவை ஹனிமூன் கொண்டாட்டத்தை மேலும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றுகிறது. 


 


3. கோவா



உலகின் டாப் ஹனிமூன் தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது கோவா. உலகம் முழுவதும் பல்வேறு ஜோடிகள் தங்கள் ஹனிமூனை கோவாவில் கொண்டாடி, தங்கள் திருமண வாழ்க்கையின் பயணத்தைத் தொடங்குகின்றனர். இங்குள்ள அழகான கடற்கரைகள் மட்டுமின்றி, கேண்டில் லைட் டின்னர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், நைட் கிளப்கள் ஆகியவை ஹனிமூனுக்குச் சிறந்த இடங்களாக அமையும். 


 


4. டார்ஜிலிங்



டார்ஜிலிங்கின் கஞ்செஞ்சுங்கா மலைகளின் பனியில் விளையாடவும், தேநீர் தோட்டங்களை ரசிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் டார்ஜிலிங்கிற்குப் பல்வேறு சுற்றுலா பயணிகள் கூடுவது வழக்கம். புதிதாக திருமணம் செய்துகொள்பவர்களுக்கு டார்ஜிலிங் நகரத்தின் குளிரும், எழிலும் மிகச் சிறந்த ஹனிமூன் தேர்வாக அமையும். இதன் வானிலையைப் பொருத்து, புதிய தம்பதிகள் டார்ஜிலிங் செல்வதைத் தேர்ந்தெடுக்கலாம். 


 


5. உதய்பூர்



ஹனிமூனுக்கான சிறந்த தேர்வுகளுள் ஒன்று உதய்பூர். அதன் வரலாறு, உணவு, சூரிய அஸ்தமனம் ஆகியவை ஜோடிகளுக்கு மிகப் பிடித்தவை. மேலும், இங்குள்ள பல்வேறு கலாச்சாரம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதும் இதன் பொழுதுபோக்கு அம்சத்தைக் கூட்டுகிறது. படகில் செல்வது, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஃபோட்டோஷூட் செய்வது, இணையோடு மகிழ்வது, சிறப்பான உணவுகளை உட்கொள்வது ஆகியவை உதய்பூரின் ஹனிமூன் அனுபவத்தை மேலும் மெருகேற்றும்.