இலங்கையில் நடந்து வரும் மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து பிரதமர் பதவியை ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு சொந்தமான வீட்டை பொதுமக்கள் நேற்று இரவு தீ வைத்து கொளுத்தினர். இத் தொடர்ந்து கொழும்பில் உள்ள பிரதம மந்திரிக்கு சொந்தமான அலரி மாளிகையில் இருந்து பலத்த ராணுவ பாதுகாப்புடன் மஹிந்த ராஜபக்சே வெளியேறினார்.


மேலும், இந்த அசாதாரண சூழலில் கொழும்புவில் இயங்கி வரும் இந்திய தூதரகம், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது. இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை.  இவ்வாறான செய்திகளை இந்திய தூதரகம் கடுமையாக மறுக்கின்றது என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. 






இந்நிலையில், இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.


பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், போக்குவரத்து  மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக குடியரசு தலைவர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அத்துடன், அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எழுத்துமூலம் அனுமதியின்றி, ஊரடங்கும் காலப்பகுதியில் மேற்படி இடங்களில் நடமாடுவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண