இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீத மக்கள் கல்லீரல் அழற்சி என்னும் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர் என ஆய்வில் தெரிய வருகிறது.
கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு ஜூலை 28 கல்லீரல் அழற்சி தினம் என்றும் ஹெபடைடிஸ் பி என்னும் வைரஸ் கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்ற பாரு சாமுயேல் பிளம்பெர்க்கை நினைவு கூறும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிகப்படியான கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் இந்த நோய் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையானது குறிப்பாக மது குடிப்பவர்களுக்கு எளிதில் வரக்கூடியது. ஜூலை 28 உலக கல்லீரல் அழற்சி தினமான இன்று அதை பற்றி அறிவோம்
உலக கல்லீரல் அழற்சி தினம்:
உலக மக்கள் தொகையில் 5 சதவீதம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் எய்ட்ஸ் நோய் தான் மிக கொடிய நோய் என்று கருதப்படுகிறது. ஆனால், அதன் இறப்பு விகிதத்தை விட கல்லீரல் அழற்சி நோயால் இறப்பு விகிதம் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த நோயின் அபாயம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2010 ஆம் ஆண்டு நடந்த உலக சுகாதார அமைப்பு நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உலகம் முழுக்க இந்த கல்லீரல் அழற்சி நோய் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது.
அதோடு, இந்த நாளானது ஹெபடைடிஸ் பி வைரஸ் கண்டுபிடித்தற்காக நோபல் பரிசு பெற்ற பாரு சாமுயேல் பிளம்பெர்க்கை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப்படுகிறது
கல்லீரல் அழற்சி நோய் வருவதற்கான காரணங்கள்:
இந்தியாவில் 18.7 சதவீத மக்கள் மது அருந்துவதாக ஆய்வில் தெரிய வருகிறது. மது அருந்துவது, போதைப் பழக்கம் அதை தவிர்த்து தேவையற்ற மருந்துகள், பாஸ்ட்புட் உணவுகள், அதிகமாக எண்ணெய் உணவுகள் உட்கொள்ளுதல் ஆகியவை கல்லீரல் அழற்சி நோய் ஏற்பட காரணமாக இருக்கிறது
கல்லீரல் அழற்சி நோய் அறிகுறிகள் :
உடலில் அடிக்கடி வயிற்று பிரச்சனைகள் வருவதும் குறிப்பாக குமட்டல், வாந்தி போன்றவை அதேபோல், வாய் துர்நாற்றம் , மஞ்சள் நிற கண்கள், கை கால்களில் வீக்கம், திடீர் எடை குறைவு ஆகியவை இதன் அறிகுறி என கூறப்படுகிறது
கல்லீரல் அழற்சி நோயை தடுக்கும் வழிகள்:
கல்லீரல் அழற்சி நோய் இருப்பவர்கள் தினசரி திராட்சை ஜூஸ், கேரட் ஜூஸ், வைட்டமின் சி அதிகம் உள்ள ஜூஸ்கள் குடிப்பதன் மூலம் கல்லீரலில் உள்ள செல்களை பலப்படுத்துகிறது. அதேபோல், இஞ்சி, மஞ்சள், திராட்சை, நெல்லிக்காய் ஆகியவற்றை தொடர்ந்து எடுத்து வந்தால் கல்லீரல் அழற்சி நோயை கட்டுக்குள் கொண்டுவரலாம் எனவும், நல்ல உணவுமுறையையும், உடற்பயிற்சியையும் கையாண்டால் இந்த அழற்சி கட்டுப்படும் எனவும் கூறப்படுகிறது.