உங்கள் வீட்டு கிச்சனில் உள்ள சிங்க் துரு மற்றும் உப்பு கறையால் பார்ப்பதற்கே அவலமாக உள்ளதா? அதை வீட்டில் உள்ள ஒரு பொருளை வைத்து எளிமையாக சுத்தம் செய்யலாம். வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு ஹேண்ட் வாஷ் லிக்விடை சிங்கில் சிறிதளவு சேர்க்கவும். பின் ஒரு கம்பி நார் கொண்டு இந்த லிக்விட் சிங்கின் அனைத்து இடங்களிலும் படும்படி நன்கு தேய்த்து விடவும். பின்பு தண்ணீரால் சிங்கை கழுவிக் கொள்ளவும். இப்போது துரு கறைகள் மற்றும் உப்பு கறைகள் நீங்கி சிங்க் பளீச்சென காட்சி அளிக்கும். 


உங்கள் வீட்டில் உள்ள தோசைக்கல் அல்லது நான் ஸ்டிக் தவா எண்ணெய் பிசுக்காக உள்ளதா? இல்லை முட்டை வாடை வருகிறதா? இதை எளிதில் சரி செய்யலாம். உங்கள் வீட்டில் உள்ள ஏதேனும் ஒரு பல் தேய்க்கும் பேஸ்ட்டை நீங்கள் பல் தேய்க்க பயன்படுத்தும் அளவு தோசை கல்லில் வைக்கவும். பின் ஒரு பழைய ஸ்பான்ச் கொண்டு இந்த பேஸ்ட்டை தோசை கல் முழுவதும் லேசாக தண்ணீர் தெளித்து தேய்த்து விடவும்.


பாத்திரம் தேய்ப்பது போல் அனைத்து இடங்களிலும் பேஸ்ட் படும்படி நன்றாக தேய்த்து விடவும். பின் தண்ணீரால் கழுவி கொள்ளவும். இப்போது தோசை கல்லில் உள்ள எண்ணெய் பிசுக்கு முழுவதுமாக நீங்கி விடும். மேலும் முட்டை வாடையும் போய் விடும். 


பூண்டு உரிப்பது என்பது சற்று சிரமமான வேலைதான். சிலருக்கு பூண்டு உரித்தால் நகம் வலிக்கும். கத்தியை பயன்படுத்தி பூண்டு உரித்தாலும் நீண்ட நேரம் ஆகும். பூண்டை உடைத்து பற்களாக எடுத்துக்கொள்ளவும். பின் மூடி உள்ள ஒரு சில்வர் பாக்ஸில் பூண்டு பற்களை போட்டுவிட்டு ஒரு நிமிடத்திற்கு நன்றாக குலுக்கி கொள்ள வேண்டும். பின் மூடியை திறந்து பூண்டு பற்களை எடுத்து பார்த்தால் சில பூண்டு பற்களின் தோல் முழுவதுமாக உரிந்து வந்து இருக்கும். சில பற்களின் தோல் பாதியளவு நீங்கி இருக்கும். இந்த தோலை எளிதில் எடுத்து விடலாம். 


மேலும் படிக்க 


House Hold Tips: அரிசியில் உள்ள புழு, பூச்சி நீங்க... சூடான இட்லி தட்டிலிருந்து ஒட்டாமல் எடுக்க: பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்!


One-Pot Pasta Recipe: ஸ்நாக்ஸ் க்ரேவிங்கா? ஒன் பாட் பாஸ்தா ரெசிபி இதோ!