மறைமலைநகர் அருகே மாடுகளை திருடிய மூன்று பேர் கைது. இறைச்சிக்கடைக்காக பார்ட் டைம்மாக திருட்டில் ஈடுபட்ட மூன்று பேரை தட்டி தூக்கிய காவல்துறை. 

 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் மாடுகள் திருடு போவதாக மறைமலை நகர் காவல் துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே நேற்று முன்தினம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலா, இவர் 20க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட ஒரு பசு வீடு திரும்பவில்லை என மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

காணாமல் போன மாடுகள்


புகாரின் பேரில் மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது மறைமலைநகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபர்களை மடக்கி விசாரித்ததில், அவர்கள் மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த மறைமலைநகர் போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர் .



" பார்ட் டைம் "


 

போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதில் காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (20) யுவராஜ் (35) சங்கர் (46) ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பார்ட் டைம்-ஆக சாலையில் உலா வரும் மாடுகளை திருடி இறைச்சி கடைக்கு விற்பனை செய்வோம் என ஒப்புக்கொண்டனர். பின்பு இவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.




 மாடுகளை குறி வைப்பது ஏன் ?


பொதுவாக சென்னை புறநகர் பகுதியில்  அதிக அளவு மேச்சலுக்கு இடமில்லை, இதன் காரணமாக மாடு வளர்ப்பவர்கள் தங்கள் மாடுகளை சில நேரங்களில் சாலைகளிலும்  விடுவது வழக்கம்.  அதே போன்று மார்க்கெட் பகுதிகளில் மாடுகளை அனுப்புவதும்,  அங்கு வீணாகும் காய்கறிகளை மாடுகள் உணவாக எடுத்துக் கொள்வதும், தொடர் கதை ஆகி உள்ளது. இதனை மர்ம கும்பல் தொடர்ந்து நோட்டமிட்டு இதுபோன்ற மாடுகள்  அதே போன்று, மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் ஆகியவற்றை குறி வைத்து  திருட்டு சம்பவங்களை நிகழ்த்தி வருவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக இது போன்ற மாடுகளை திருடி  ஒரு குறிப்பிட்ட இறைச்சி கடைகளுக்கு வியாபாரம் செய்வதும், அதன் மூலம் வரும் பணத்தை வைத்து உல்லாசமாக  வாழ்வதும் அதிகரித்து இருக்கிறது.  இதுபோக ஒரு சில கும்பல்கள்  வீட்டில் இருக்கும் மாடுகளை அவ்வப்போது  திருடுவதும் அதிகரித்து வருகிறது.