எலுமிச்சை பழம் நீண்ட நாட்கள் ப்ரெஷ்ஷாக இருக்க வேண்டுமென்றால், டைட்டான மூடி உள்ள ஒரு டப்பாவை எடுத்து அதில் சற்று ப்ரெஷ்ஷாக உள்ள எலுமிச்சைப் பழங்களை சேர்த்து எலுமிச்சைப் பழம் மூழ்கும் அளவுக்கு அந்த டப்பாவில் தண்ணீர் சேர்த்து பின் டப்பாவை டைட்டாக மூடி விட வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இப்படி வைத்தால் ஒரு மாதம் வரை எலுமிச்சைப் பழம் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
பச்சை மிளகாயை இரண்டு மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்க பச்சை மிளகாயை எப்படி ஸ்டோர் செய்து வைக்க வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம். முதலில் ப்ரெஷ்ஷாக பச்சை நிறத்தில் உள்ள பச்சை மிளகாயை மட்டும் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். மிளகாயின் காம்புகளை நீக்கி விடவும். டைட்டான மூடி உள்ள ஒரு அகலமான டப்பாவை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் அடியில் டிஷ்யூ பேப்பரை போட்டுக் கொள்ள வேண்டும். இதன் மீது காம்பு நீக்கிய பச்சை மிளகாயை சேர்த்து அதன் மீது டிஷ்யூ பேப்பரை போட்டு மூடவும். பின் அந்த டப்பாவை மூடிக்கொள்ள வேண்டும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும். இது போன்று வைத்தால் இரண்டு மாதம் ஆனாலும் பச்சை மிளகாய் ஃப்ரஷ்ஷாகவே இருக்கும்.
தக்காளி ஃப்ரஷ்ஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். தக்காளியை பூச்சி தாக்காமல் இருக்க ரசாயனம் கலந்து பூச்சி மருந்துகள் அதிக அளவில் அடிக்கப்பட்டிருக்கும். எனவே முதலில் தக்காளிகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தக்காளி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து தக்காளிகளை கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் தக்காளிகளை துணியின் மீது பரப்பி ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டைட்டான மூடி உள்ள டப்பாவை எடுத்துக்கொண்டு அதன் அடியில் டிஷ்யூ பேப்பரை பரப்பிவிடவும் அதன் மீது சற்று காயாக உள்ள தக்காளிகளை அடியில் அடுக்கிக்கொள்ள வேண்டும்.
பழுத்த தக்காளிகளை மேல் பகுதியில் அடுக்கிக்கொள்ள வேண்டும். இதன் மீது டிஷ்யூ பேப்பரை போட்டு மூடி பின் டப்பாவை நன்கு மூடியால் மூடி ஃப்ரிட்ஜிக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி வைத்தால் ஒரு மாதம் வரை தக்காளி கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
மேலும் படிக்க
Poha Breakfast: வித்தியாசமான டேஸ்ட்டி காலை உணவு.. கார அவல் கொழக்கட்டை ரெசிபி...செய்முறை இதோ!