பொதுவாக கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் நமக்கு சில சரும பிரச்னைகள் வரக்கூடும். அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்று தான் சருமம் பொழிவு இல்லாமல் இருப்பது. அதிக வெயில் காரணமாக நமது சருமம் வறண்டு விடும் சூழல் உருவாகும். அத்துடன் அது பார்ப்பதற்கு பொழிவு இழந்து மிகவும் சோர்ந்து இருப்பது போல ஒரு தோற்றத்தை தரும். அத்துடன் கொரோனா ஊரடங்கு காலத்தில் நமது வேலை பழு மற்றும் வீட்டு பழுவின் காரணமாக நாம் நமது உடம்பிற்கு போதிய நேரம் செலவிடுவதில்லை.
இந்தச் சூழலில் வீட்டில் இருந்தப் படியே நமது சருமத்தை பொழிவுடன் வைக்க சில எளிய நடைமுறைகளை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அவை என்னென்ன?
அடிக்கடி கழுவுதல்:
தற்போது கோடை காலம் என்பதால் நமக்கு அதிகளவில் வியர்வை வரக் கூடும். இதனால் ஒரு முறை குளிப்பதால் இதை தவிர்க்க முடியாது. அதேபோல் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிப்பதற்கு சிலர் நேரமும் இருப்பதில்லை. இந்தச் சூழல் அவர்கள் அடிக்கடி முகம் மற்றும் கை கால்களை சுத்தும் செய்ய வேண்டும். குறிப்பாக முகத்தை ஒருநாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் நமது முகத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறையும்.
சருமத்தில் இருக்கும் அழுக்கு நீக்குதல்:
மேலும் வாரத்திற்கு ஒரு முறை நமது சருமத்தில் சேர்ந்து இருக்கும் அழுக்கை நீக்க வேண்டும். இதற்கு வீட்டிலிருந்த படியே எளிமையாக ஒரு ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். இதற்கு தயிர், பால் ஆடை மற்றும் எலுமிச்சை ஆகியவை பயன்படுத்தி தயார் செய்து கொள்ளலாம். மேலும் கண்ணுக்கு மேல் வெள்ளரிக்காய் துண்டை குளிர்ச்சிகாக பயன்படுத்தலாம்.
அதிகமாக தண்ணீர் குடித்தல் :
கோடை காலத்தில் சருமம் பிரச்னையை தவிர்க்க நாம் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று அதிகமாக தண்ணீர் குடிப்பது தான். ஏனென்றால் கோடை காலத்தில் வெப்பத்தின் காரணமாக நமது உடம்பு விரைவில் தண்ணீர் அளவு குறையலாம். அதை ஈடுகட்ட சரியான அளவில் அவ்வப்போது தண்ணீர் குடித்து வந்தால் இதை தவிர்க்கலாம். மேலும் சரியான அளவில் தண்ணீர் குடிப்பதன் மூலம் நாம் மற்ற சில உடம்பு பிரச்னைகள் வருவதையும் தடுக்கலாம்.
இவ்வாறு நமது வீட்டிலிருந்தபடி சில எளிய நடைமுறைகளை கையாண்டு சருமத்தை பொழிவுடன் வைத்து கொள்ள முடியும். ஊரடங்கு காலத்தில் நமது வேலை பழுக்களுடன் சேர்த்து உடம்பிற்கும் சரியான நேரத்தை ஒதுக்கி அதை சரியாக பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் நமது முகம் மட்டுமல்லாமல் வாழ்க்கையும் பொழிவுடன் இருக்கும்.