பாலியல் உறவுக்கு முன் மேற்கொள்ளப்படும் முன் விளையாட்டுகளில் நல்லவை, கெட்டவை எனப் பிரிக்க கூடியதாக எதுவும் இல்லை. மேலும், பல நேரங்கள் உங்கள் இணையுடன் அணைப்பது, தொடுவது, முத்தம் தருவது முதலானவற்றை மேற்கொள்ள வேண்டியதும் இல்லை. சில நிமிடங்கள் மட்டுமே பாலியல் உறவுக்கு முன்பாக முன் விளையாட்டுகள் மேற்கொள்வதே போதுமானது.
குறைந்தது 10 நிமிடங்களாவது உங்கள் உடல்களைத் தயாராக்க செலவிட வேண்டும் எனக் கூறும் பாலியல் துறை மருத்துவர்கள், உடலுறுப்புகளை நோக்கி செல்வதற்கு முன்பாக, வயிறு, இடுப்பு, தொடையின் உள்பகுதி, மார்பகங்கள் முதலானவற்றின் மீது முத்தம் தருவது, தடவுவது முதலானவற்றில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உங்கள் மனதையும், உடலையும் பாலியல் உறவுக்குத் தயாராக மாற்ற, முன் விளையாட்டுகளை மேற்கொள்ளும் சில வழிமுறைகளை நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளோம்...
1. ஏதேனும் விளையாட்டை விளையாடவும். பாலியல் கேம்ஸ்களை வாங்கினால், அவற்றில் தம்பதியினர் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், விதிகள், ஒருவருக்கு ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுரை முதலானவற்றைப் பெறலாம்.
2. ஆபாசமாகப் பேசுங்கள். உங்கள் மனதில் உணர்வதைப் பேசுங்கள். நீங்கள் சிந்திப்பதையும், உங்கள் இணையிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் பேசுங்கள்.
3. நெருக்கமாக இருங்கள். வெவ்வேறு வழிகளில் உங்களைத் தொடுவது, அணைப்பது முதலானவற்றைச் செய்யுங்கள். உதாரணமாக, இருவரும் நேர்ந்து நடனம் ஆடலாம்; ஒன்றாக குளிக்கலாம்.
4. எண்ணெய், வாசனை மிக்க பொருள்கள் முதலானவற்றைப் பயன்படுத்துங்கள். உங்கள் இணையோடு ஒருவருக்கு ஒருவர் மாற்றி, மாற்றி முதுகு, கால், முழு உடல் மசாஜ்களை எண்ணெய், லோஷன் முதலானவற்றைப் பயன்படுத்துங்கள். சாக்லேட், க்ரீம் முதலான சுவையான பொருள்களை தங்கள் இணையின் தோளில் ஊற்றி, அதனை நீக்க நாக்கைப் பயன்படுத்துவதும் உலகம் முழுவதும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பாலியல் முன் விளையாட்டுகள்.
5. இருவரும் ஒருவருக்கு ஒருவர் தொடுவது சிறந்தது. உங்கள் இணையின் முகத்தைத் தடவுவது, முடியில் விரல் வைத்து வருடுவது, கைகள், இடுப்பு, தொடை முதலான உடல் பகுதிகளில் கூச செய்வது முதலானவற்றையும் செய்யலாம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் உரசிக் கொள்வது; நல்ல உணர்ச்சியைத் தரும் செயல்களை செய்வது ஆகியவையும் பாலியல் முன் விளையாட்டுகளை மேலும் சிறப்பாக மாற்ற உதவும்.
6. வாய் வழிப் புணர்ச்சியைத் தவிர்க்காமல் மேற்கொள்வது பாலியல் முன் விளையாட்டுகளில் சிறந்த ஒன்று. அதுவும் பாலியல் உறவைச் சிறந்ததாக மாற்ற உதவும்.
7. பாலியல் உறவை விட பாலியல் முன் விளையாட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதுவே நீண்ட கால உறவுக்கான வழி.