வயிறு உப்புசமாக இருந்தாலே, எடை கூடியதைப்போலத்தான் தெரிவோம். அதுக்காகத்தான் ஒரே நாளில் 2 கிலோ எப்படிக் குறைப்பது என்னும் டைட்டில் போட்டு இந்த வீடியோவைப் போட்டேன் என ரம்யா சுப்ரமணியன் பதிவிட்டிருந்தார்.


ஒரு சில நாட்களில் நமக்கு திடீரென நாம் ரொம்பவே உப்புசமாக உணர்வோம். உடலில் எடை கூடியது போல் இருக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். தூக்கமின்மை, அழுத்தம், சாப்பாட்டில் உப்பு, கார்போஹைட்ரேட்ஸ் அதிகமாகியிருக்கலாம், அல்லது நீங்கள் நீண்ட தூரம் விமானப் பயணம் மேற்கொண்டிருக்கலாம். இப்படியான சில நிகழ்வுகளாலேயே திடீர் உப்புசம் ஏற்படும். இந்த உப்புசம் வயிறு, முகம் போன்ற பகுதிகளில் தான் தெரியும். இதனை ஒரே நாளில் குறைக்க முடியும். அதற்கான 5 டிப்ஸ்களைப் பகிர்ந்துள்ளார் விஜய் டிவி புகழ் தொகுப்பாளர் ரம்யா. 


நம்பர் 1: உப்பு அதிகமான ப்ராசஸ்ட் ஃபுட் என்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும். அதாவது கேன்ட் ஃபுட், ப்ராசஸ்ட் ஃபுட், பாக்கெட் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் என எல்லாவற்றையும் நிறுத்திவ்டுங்கள். இதற்கான சிறந்த வழி உப்புசமாக உணரும் போது வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். அதற்காக நான் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் உணவை வீட்டில் செய்வேன் என்று சாப்பிடாதீர்கள். எளிமையான உப்பு அதிகமில்லாத உணவை சாப்பிடுங்கள்.


நம்பர் 2: பொட்டாசியம் அதிகமுள்ள உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பொட்டாசியம் என்ற தாது அதிகமுள்ள உணவை எடுத்துக் கொள்வதால் உடலில் எலக்ட்ரோலைட்ஸ் சமநிலை பெறும். பொட்டாசியம் அதிகமாகும்போது சோடியம் குறையும். சிறுநீர் மூலம் சோடியம் வெளியேறும். இந்த பொட்டாசியம் வாழைப்பழம், ப்ரோகோலி, கீரை வகைகள், இளநீர், அவகேடோ, சக்கரைவல்லிக் கிழங்கு ஆகியனவற்றை உட்கொள்ள வேண்டும்.


நம்பர் 3: அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். என்னடா இது தண்ணீர் தேக்கத்தால் ஏற்படும் உப்புசத்தைக் குறைக்க தண்ணீர் குடிக்கச் சொல்கிறார்களே என்று நினைக்க வேண்டாம். தண்ணீர் ஏன் தேக்கமடைகிறது என்றால் உங்கள் உடலில் நீர்ச்சத்து உங்கள் வாழ்க்கைமுறையால் உணவுப் பழக்கத்தால் குறைகிறது. அதனாலேயே நீர்ச்சத்தை உடல் எங்கோ தேக்கிவைக்கிறது. ஆனால் நீங்கள் தண்ணீர் அருந்தி உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும்போது தேக்கமடைந்த நீர்ச்சத்து வெளியேறும். உடலில் தண்ணீர் சமநிலை அடையும். இதற்காக ஜூஸ், டீ, காஃபி குடிக்காதீர்கள். வெறும் பச்சைத் தண்னீர் குடிக்கவும்.


நம்பர் 4: கார்போஹைட்ரேட்ஸ் குறைவாக எடுத்துக் கொள்ளவேண்டும். கார்போஹைட்ரேட்ஸை அதிகமாக சாப்பிட்டால் க்ளைகோமெட்டாக கல்லீரில் ஸ்டோர் ஆகும். அதனால் இந்த மாதிரியான வேளையில் காய்கறிகள், தானியங்கள், உலர் கொட்டைகள் ஆகியனவற்றை உட்கொள்ளலாம்.


நம்பர் 5: உடற்பயிற்சி செய்யுங்கள்: உப்புசம் ஏற்பட்டால் உடனே தேவையான உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சிகளை உங்களுக்கு ஏற்ற மாதிரி செய்யுங்கள். 


இந்த மாதிரியான எளிமையான நடைமுறைகளைப் பின்பற்றி, உப்புசத்தால் ஏற்பட்ட உடல் எடையை உடனடியாகக் குறைக்கலாம்” என்றார்