சமீபத்தில் ஒரு கிலோ பன்னீரின் விலை ரூபாய் 800 முதல் 1000 ரூபாய் வரையில் விற்க்கப்பட்ட செய்திகளை நீங்கள் அறிந்திருக்கலாம். இது இணையத்தில் படுன் வைரலாக ஷேர் செய்யப்பட்டது.இதற்கு காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கழுதை பால் பனீர் :
சமீபத்தில் செர்பியாவில் ஒரு கிலோ பன்னீர் இந்திய ரூபாய் மதிப்பில் 80,000 அளவில் விற்கப்படுவதாக இணையத்தில் செய்திகள் வெளியானது. ஏன் இந்த பன்னீருக்கு இவ்வளவு மவுசு என்றால் இது ஆட்டுப்பால் , மாட்டுப்பாலில் தயாரிக்கப்படுவதில்லை. கழுதைப்பாலில் தயாரிக்கப்படுகிறது.1 கிலோகிராம் £800 (தோராயமாக ரூ. 70,000) விலை, இந்த வினோதமான விலையுயர்ந்த பனீர்/சீஸ், செர்பியாவின் மிகவும் பிரபலமான இயற்கை இருப்புகளில் ஒன்று. ஜசாவிகாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பன்னீர் அந்த ஊரில் பூலே என்றும் அழைக்கப்படுகிறது. பூலே என்றும் அழைக்கப்படும் கழுதை பன்னீர் செர்பியாவின் ஜசாவிகாவில் உள்ள கழுதை பண்ணையில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோகிராம் விலையுயர்ந்த பாலாடைக்கட்டி தயாரிக்க சுமார் 25 லிட்டர் புதிய கழுதை பால் தேவைப்படுவதாக கூறப்படுகிறது.
விலை உயர்வுக்கு காரணம் :
டெய்லி மெயில் செய்தி நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, சுமார் 25 லிட்டர் புதிய கழுதைப்பாலை அரைத்து, பதப்படுத்தப்பட்ட இந்த பாலாடைக்கட்டி வெறும் 1 கிலோகிராம் மட்டுதான் தயாரிக்கப்படுமாம், அதனால்தான் இது உலகின் மிக விலையுயர்ந்த பன்னீராக இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு என்னவோ இது ஸ்பானிஷ் மான்செகோ சீஸ் போலவே உள்ளது. மான்செகோ சீஸ்தான் உலகில் அதிக சுவைக்கொண்ட சீஸாக அறியப்படுகிறது. ஆனால் அது கூட அங்கிருக்கும் லோக்கல் மார்க்கெட்டில் கிலோ 13 யூரோவிற்கு கிடைக்கிறது. இந்த கழுதை சீஸ் வெள்ளை நிறத்தில் , சிதறிய அமைப்புடன் தோற்றமளித்தாலும் சுவை அபாரமாக இருக்குமாம். கழுதைப்பால் நம்ம ஊரிலேயே லிட்டர் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.