துணையின் மனதில் உள்ள துயரங்களையும், தேவைகளையும் அறிந்து வாழ்க்கை நடத்தினாலே தாம்பத்ய உறவில் எந்தப்பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


கணவன்- மனைவி இடையே சில சமயங்களில் பெரும் பிரச்சனையாக அமைவது அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை தான். ஊடல், கூடல் இல்லையென்றால் வாழ்க்கை முற்றுப்பெறாது. ஆனால் அதற்கு நம் துணையின் மனநிலையை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். மேலும் தாம்பத்ய உறவைத் தொடங்க உங்கள் துணையைத் தடுப்பது எது? என்பதை முதலில் நீங்கள் கண்டுபிடித்துக்கொள்வது அவசியம். அதனை அறிந்துக்கொள்ளாமல் வெறும் போதைப்பொருளாக மட்டும் பெண்களைப்பார்க்க கூடாது. எனவே இந்நேரத்தில் தாம்பத்திய உறவைத் தொடங்க உங்கள் துணையைத் தடுப்பதற்கான பொதுவான காரணங்களைப் பற்றியும், அதற்கு என்ன தீர்வு என்பது குறித்த கருத்துக்களையும் பற்றியும் இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்..





தாம்பத்திய உறவைத் தொடங்கினால் மனைவி பதிலளிப்பாரா?


தற்போதுள்ள சூழலில்  பலரின் மனதில் எழக்கூடும் பொதுவாக கேள்வியாகும். பொதுவாக கொஞ்சம் ஈகோ கொண்ட பெண்கள் தங்கள் கணவருடன் ஊடலில் இருக்கும் போது அவர்களின் ஈகோ நிராகரித்து விடுவோமா? என்ற அச்சம் அதிகளவில் இருக்கும்.


எனவே இதுப்போன்ற நேரங்களில் உங்களது ஈகோவையெல்லாம் விட்டு விட வேண்டும். கணவன் மற்றும் மனைவி யாராக இருந்தாலும், உங்கள் துணை முன்வந்து உங்களை முத்தமிட்டாலும் அதற்குப் பதலளிக்கப் பழகுங்கள். சம உணர்ச்சியை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் அனைவரும் வேலை இருக்கும். இதனால் எப்போதும் பிஸியாகவே இருக்கலாம். இருந்தாலும் உங்கள் துணையின் தேவைகளையும், ஏக்கங்களையும் புறக்கணிக்காதீர்கள் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.


பாலியல் உறவில் பெண்ணுக்கு  ஏற்படும் வலிக்கானத் தீர்வு?


உடலுறவுக்கொள்ளும் போது தம்பதிகள் அதிகம் சந்திக்கும் பொதுவான பிரச்சனையாகும். எனவே இதற்கு தீர்வைக்கண்டுபிடிப்பது அவசியம். பொதுவாக கணவன்- மனைவி இருவருக்குள்ளேயும் பாலியல் இன்பத்தின் உச்சம் முற்றிலும் மாறுபட்டிருக்கும். எனவே சில நேரங்களில் ஃபோர்ப்ளே எனப்படும் பாலியல் உறவில் இன்பம் அனுபவித்துவிட்டு பின் உறவில் உச்சம் கொள்வது பெண்ணிற்கு வலியைத் தவிர்க்க உதவும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதனையும் மீறியும் உங்களுக்கு வலி ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி உடலில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.


இதோடு உடலுறவின் போது சில விஷயங்கள் தெரியாவிடில் அதற்கான பெண்களை கேலி செய்வதை அந்நேரத்தில் தவிர்க்க வேண்டும். இதோடு ஆண்கள் படுக்கையறையில் தங்களின் துணை அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என நினைப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் வாழ்வில் ஒவ்வொருவருக்கும் கம்பெர்ட் சோன் இருக்கும். பாலியல் உறவு குறித்து உங்கள் மனைவிக்கு தெரியவில்லை என்றால் என்ன என்று சொல்லிக்கொடுங்கள். தேவையில்லாமல் விமர்சிப்பதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.





தாம்பத்திய உறவு என்பது ஆண் மற்றும் பெண் இருவருக்கும் இன்பம் இருக்கும் என்றாலும், பெண்களை இதற்காக மட்டும் பயன்படுத்தாமல் அவர்களின் மனநிலையையும் புரிந்து நடப்பது மிகவும் முக்கியமானது. இந்த புரிதல் இல்லாமல் இருக்கும் போது தான் தேவையில்லாத பிரச்சனைகளைத் தம்பதியினர் சந்திக்க நேரிடுகிறது என்பது தான் நிதர்சன உண்மை.