நாள்: 29.07.2022


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


 மதியம் 12.15 மணி முதல் மதியம் 1.45 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


குளிகை :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம் :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவினை ஏற்படுத்தும். உதவி கிடைக்கும் நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே,


மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். புதிய முதலீடுகள் தொடர்பான பணிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பக்தி மேம்படும் நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


புதிய முயற்சிகளின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் புதுமையான சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,


உயர்பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று மேற்கொள்ளவும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் மனதில் அமைதி உண்டாகும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மையை அறிந்து முடிவெடுப்பது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். மனதில் இருந்த குழப்பத்திற்கு தெளிவான முடிவு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பலதரப்பட்ட செலவுகளை குறைத்துக் கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தடைகள் விலகும் நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவி சாதகமாக அமையும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். மகிழ்ச்சியான நினைவுகளின் மூலம் மனஅமைதி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் உண்டாகும். திருப்தி நிறைந்த நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான சூழ்நிலைகள் அமையும். மதிப்பு மேம்படும் நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


புதிய நபர்களின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நுணுக்கமான விஷயங்களில் ஆராய்ந்து செயல்படுவது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மாமியார் உறவுகளின் வழியில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. விதிகளுக்கு உட்பட்டு நடப்பது தேவையற்ற விரயங்களை தவிர்க்கும். நிதானம் வேண்டிய நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,


உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திருத்தலம் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். மறைவான செயல்பாடுகளை புரிந்து கொள்வதில் விருப்பம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் பயணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விவேகம் வேண்டிய நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே,


தொழில் சார்ந்த புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சலும், புரிதலும் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


நிலுவையில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த நபர்களை சந்திப்பீர்கள். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.