Almond Health Benefits: நினைவாற்றலை அதிகரிப்பது முதல் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக்குறைத்து ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு பாதாம் முக்கிய பங்கு வகித்து உதவி வருகிறது.


பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற பலவகையான நட்ஸ்களில் ஏராளமான புரதச்சத்துக்கள் உள்ளன. இதில் பொதுவாக பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்சிடன்டஸ் அதிகளவில் உள்ளன. எனவே இவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால் பாதாம் பருப்பை அதிகளவில் சாப்பிடும் போது உடலில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. இந்த சூழலில் பாதாமினை அப்படியே சாப்பிடலாமா? அல்லது ஊற வைத்து சாப்பிடலாமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழக்கூடும். இந்நிலையில் பாதாமிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு அவற்றை எப்படி சரியான முறையில் சாப்பிடுவது என்பது பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்..



பாதாம் சாப்பிடுவதற்கான சிறந்த வழிமுறைகள்:


பாதாம் பருப்பை தோலுடன் அல்லது தோல் இல்லாமல் சாப்பிட வேண்டுமா? என்று  குழப்பம் பெரும்பாலான மக்களுக்கு ஏற்படக்கூடும். இதனை பச்சையாகவோ அல்லது வறுத்தும் சாப்பிடலாம். ஆனால் ஊறவைத்த அல்லது உரித்த பாதாம் பருப்பினைச் சாப்பிடுவதால் சில கூடுதல் நன்மைகளையும் நாம் பெற முடியும். மேலும் இந்த ஊறவைத்த பாதாமில் உள்ள வைட்டமின் பி மற்றும் போலிக் அமிலம் புற்றுநோயை எதிர்த்துப்போராடுவதற்கு உதவுகிறது.


ஊறவைத்த பாதாமின் பயன்கள்: பாதாம் பருப்பினை இரவில் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து சாப்பிடும் போது அதிக சத்துக்களை நாம் பெற முடியும். குறிப்பாக ஊறவைத்த பாதாம் பெரிஸ்டால்டிக் இயக்கத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், அஜூரணம், வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. இதோடு இதில் மெக்னீசியம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதோடு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை மேலும் குறைக்கிறது.


தினசரி பாதாம் பருப்பை பயன்படுத்தும் முறை:  தினமும் 3-4 பாதாம் பருப்புகளை இரவில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காலையில் அதன் தோலை உறித்து சாப்பிடும் போது உங்களுக்கு அன்றைக்கு தேவையான உடனடி ஆற்றலை நீங்கள் காலை முதலே பெற்றுக்கொள்ளலாம். இதோடு மட்டுமின்றி பெரும்பாலான மக்கள் டயட் என்கிற பேரில் காலை உணவாக ஓட்ஸ், ப்ரூட் ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுகின்றனர். எனவே அப்போது அதனுடன் பாதாம் பருப்பினையும் சேர்த்து உட்கொள்ளலாம். மேலும் உலர் திராட்சை, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள் நீங்கள் திண்பண்டங்களாக சாப்பிடும் பொழுது பாதாம் பருப்பையும் மக்கள் அதனுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதோடு குழந்தைகளுக்கு வீட்டிலேயே குக்கீஸ்கள், லட்டுகள், பாயசம் போன்றவை செய்துக்கொடுக்கும்போது பாதாமினை அதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.



அதிகமாக பாதாம் சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படுமா? : பாதாமினை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அதிகப்படியான ஆற்றல்களை நாம் பெறுகிறோம். ஆனால், தினமும் 6-8 பாதாம் பருப்பினை விட அதிகப்படியாக உட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நமக்கு அதிகப்படியான எடை அதிகரிப்புக்கு வழிவகுப்பதோடு, உடலில் வெப்பத்தையும் அதிகரிக்கிறது. எனவே தினமும் 3-4 பாதாம் பருப்பினை மட்டும் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்