நமது விழித்திரையின் சிறிய மற்றும் முக்கியமான பகுதியான மாகுலா, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை உணரும் திறனில் முக்கிய பங்கை வகிக்கிறது. மையப் பார்வைக்கு பொறுப்பு, இது வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD) க்கு எளிதில் பாதிக்கப்படுகிறது, இது பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் பொதுவான கோளாறாகும்.


நவீன மருத்துவம் இதற்கு பல்வேறு சிகிச்சைகளை வழங்கும் அதே வேளையில், ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முரைகள் மாகுலர் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான இயற்கை முறைகளை எடுத்துக்காட்டுகின்றன.


திரிபலா: ஆயுர்வேத மருத்துவ முறையில் திரிபலா முக்கிய பங்காற்றுகிறது.  ஆம்லா (எம்பிலிகா அஃபிசினாலிஸ்), ஹரிடகி (டெர்மினாலியா செபுலா) மற்றும் பிபிதாகி (டெர்மினாலியா பெல்லிரிகா) ஆகியவற்றின் கலவையே திரிபலா ஆகும். இந்த கலவையானது மாகுலர் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது.


ஆம்லா (நெல்லிக்காய்): வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த அம்லா, கண்கள் உட்பட ஆரோக்கியமான திசுக்களை பராமரிக்க உதவுகிறது. அதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தின் மூலம் விழித்திரைக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும்.


ஹரிடகி (டெர்மினாலியா செபுலா): ஹரிடகியில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து உள்ளன, கண் எரிச்சலைக் குறைக்க இது உதவும். அதுமட்டுமின்றி மாகுலாவைப் பாதுகாப்பாக வைக்க உதவும்.


பிபிடாகி (டெர்மினாலியா பெல்லிரிகா): பிபிடாகியில் உள்ள உயிரியல் கூறுகள் (bioactive components) இரத்த ஓட்டம் மற்றும் பார்வைத் தெளிவை மேம்படுத்துவதன் மூலம் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. திரிபலாவில் உள்ள இந்த மூன்று பழங்களின் சக்திவாய்ந்த கலவையானது மகுலாவை பாதுகாக்கிறது, கண்களில் எற்படும் oxidative stress எதிர்த்துப் போராட உதவும். மேலும் கண்களில் அழற்சியால் ஏற்படும் வீக்கத்தை குறைத்து மாகுலாவின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.  


குங்குமப்பூ:  குங்குமப்பூ (குரோக்கஸ் சாடிவஸ்) சமையலுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. அதில் மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதன் நிறம் குரோசினில் இருந்து வருகிறது, இது மாகுலர் ஆரோக்கிய நன்மைகளுக்கு உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கரோட்டினாய்டு ஆகும். குங்குமப்பூ கண் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, விழித்திரை செல்களை oxidative stress - லிருந்து  பாதுகாக்கிறது. குங்குமப்பூவை, உணவு அல்லது வேறு வடிவத்தில் எடுத்துக்கொள்ளலாம். அப்படி உட்கொள்வதன் மூலம் தெளிவான கண்பார்வை மற்றும் மாகுலர் ஆரோக்கியத்தை சீராக வைக்க உதவும்.


ஜின்கோ பிலோபா: சீன மருத்துவம் பல நூற்றாண்டுகளாக ஜின்கோ பிலோபாவைப் பயன்படுத்துகிறது. இதன் இலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் டெர்பெனாய்டுகள் உள்ளன, அவை ஆக்ஸிடண்டஸ் மற்றும் நியூரோபிராக்டிவ் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது, குறிப்பாக மாகுலாவுக்கு நன்மை பயக்கும்.


ஜின்கோ பிலோபா கண் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம், ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கலாம் மற்றும் விழித்திரை செயல்பாட்டை ஆதரிக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த நன்மைகள் மாகுலர் சிதைவு அபாயத்தில் இருந்து பாதுகாக்க உதவும்.  இது மட்டுமின்றி உடற்பயிற்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சீரான உணவு முறை, கண் பராமரிப்பு ஆகியவை கண் பார்வை குறைபாடுகளை தடுக்க உதவும்.  


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.