செக்ஸ் முழுமையாக எப்படி இருக்கும் என ஆண்களுக்கு மட்டும்தான் தெரியும். சினிமாவில் காண்பிக்கும் உடலுறவு காட்சிகள் கூட ஆண்களுக்கு உடலுறவு எப்படி இருக்கும் என்பதை மையப்படுத்திதான். அதனால் உடலுறவு பெண்களுக்கு எப்படி இருக்க வேண்டும்? பெண்களின் தேவை அதில் என்ன? பெண்களுக்கு உடலுறவு என்பது எதிலிருந்து எது வரை? என எவரும் விவாதித்ததில்லை. 


உடலுறவின் போது பிறப்புறுப்புப் பகுதிகள் ஈரமடைவது(Getting wet), உச்சமடைவது (orgasm) எல்லாம் ஆண்கள் உச்சம் அடைவது போல, செக்ஸில் பெண்களுக்குக் கிடைக்கும் இன்பம்.  ஆனால் ஒருகட்டத்தில் பிறப்புறுப்பு வறண்டுபோகத் தொடங்கிவிடும், உடலுறவின்போது ஈரமடைவது நின்றுபோகும். பெரும்பாலான பெண்கள் இதனை கவனிப்பதில்லை.  உச்சமடைய முடியும்போது ஈரமடைவது அத்தனை கவனிக்கவேண்டிய விஷயமா என்றால், ஆம்! பெண்களே உங்கள் உடலில் நீங்கள் கவனிக்கத் தவறிய வேறு சில விஷயங்களின் அறிகுறிகளாக அவை இருக்கலாம். அவை என்னென்ன?


1. உங்களுக்கு ஈஸ்ட்(Yeast) தொற்று ஏற்பட்டிருக்கலாம்


பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதால் அங்கே மற்ற பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுத்து ஈரப்பதம் உண்டாவதையும் தடுக்கலாம் என்கிறார் நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் மருத்துவர் ரேக்கல் டட்ர்டிக். இது ஒவ்வொரு பெண்களுக்கும் மாறுபடும். இதனால் அவருக்கு உடல் அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றாலும் உடலுறவின்போது சங்கடமான சூழலாக அவருக்கு இருக்கும்.


2. உங்கள் மாத்திரைகள் காரணமாக இருக்கலாம் 


உங்களது அலர்ஜிக்காக நீங்கள் மாத்திரை எடுத்துக் கொள்பவர் என்றால் அது கூட உங்கள் பிறப்புறுப்பு ஈரமடைவதைத் தடுக்கும். மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.


3. கருத்தடை மாத்திரை காரணமாக இருக்கலாம்


நீங்கள் கருத்தடை மாத்திரை எடுத்துக்கொள்பவர் என்றால் அதுகூட உங்கள் பிறப்புறுப்பை வறண்டுபோகச் செய்யலாம். அதில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவு பிறப்புறுப்பில் ஈரப்பதத்தைக் குறைக்கும்,


4. நீங்கள் தாய்ப்பால் கொடுப்பது காரணமாக இருக்கலாம்


தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருக்கும். ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருந்தால்தான் இடுப்பு எலும்புப் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரித்து பிறப்புறுப்பில் ஈரமும் ஏற்படும்



5. மன அழுத்தம்


பெண்களுக்கு பிறப்புறுப்பு ஈரமடையாமல் போவதற்கு மன அழுத்தம் பொதுவான காரணம். பெரும்பாலான பெண்கள் வீட்டுவேலை, பணியிடம் என மல்டிடாஸ்கிங் செய்பவர்கள் என்பதால் அழுத்தம் அதிகரித்து பாலுணர்வு தூண்டுதல் என்பதே குறைந்து காணப்படும். இதன்காரணமாகக் கூட ஈரமடைவது நின்றுபோகும் என்கிறார் மருத்துவர். 


6. லூப்ரிக்கண்ட்டில் பிரச்னை இருக்கலாம்


நீங்கள் உங்கள் பிறப்புறுப்பை ஈரமாக வைத்துக் கொள்ள பயன்படுத்தும் லூப்ரிக்கண்ட்டில் பிரச்னை இருக்கலாம், உங்கள் மருத்துவரின் பரிந்துரையின்படி அதனை மாற்றவும். 


எதுவாக இருப்பினும் உங்கள் பிறப்புறுப்பில் வறண்டுபோன உணர்வு ஏற்பட்டால் தயங்காமல் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது அவசியம்.