குங்குமப்பூ பீச் கர்னல் மற்றும் ரோஜா எண்ணெய்களின் கலவையுடன் தயாரிக்கப்படும் குங்குமாதி தைலத்தை உபயோகிக்கும்போது சருமத்திற்கு அத்தியாவசிய வைட்டமின்களையும் வழங்குவதோடு முகப்பராமரிப்பிற்கு உதவியாக உள்ளது என சரும மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் குளிர்காலம் மற்றும் வெயில்காலங்களுக்கு ஏற்றவாது சருமத்தைப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக சிலருக்கு எண்ணெய் பசையுள்ள சருமம் இருக்கும். எனவே ஃபேஷியல் எண்ணெய்களைப் பயன்படுத்தினால் முகத்தில் பருக்கள் ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்படும். இதனால் என்ன செய்வது? எந்த பேஷியல்களைப் பண்ணினால் முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும்  என்ற கேள்விகள் எழக்கூடும்.


இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாகத்தான்  ஸ்கின் டாக்டர்கள் சில டிப்ஸ்களைக் கூறுகின்றனர். இது என என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.



அழகான சருமம் என்பது சரியான அளவு நீர் மற்றும் எண்ணெய் உள்ளடக்கத்தின் கலவையாகும். பொதுவாகவே தோல் இயற்கையாகவே நிறைய தண்ணீரை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தினால் நாம் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துகிறோம்.


அதே வேளையில் மற்றொரு புறம் ஃபேஷியல் எண்ணெயை உபயோகிக்கிறோம். இது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய்களை சுரக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவியாக உள்ளது என தெரிவிக்கின்றனர்.


குறிப்பாக 30 வயதிற்குப்பிறகு உடல் குறைவான எண்ணெயை உற்பத்தி செய்வதால், நம்மைப் பராமரித்துக்கொள்வதற்காக ஃபேஷியல் எண்ணெயை நாம் பயன்படுத்துகிறோம். இது அவசியமான ஒன்றும் கூட. இதற்காக சில ஃபேஷியல் எண்ணெயைப் பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புகள் அதிகமாகி முகப்பருக்கள் அதிகமாகும் என்ற அச்சம் பல பெண்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இதுபோன்ற எந்தப் பிரச்சனைகளும் இல்லை.


ஆனால் அதற்காக எந்த ஃபேஷியல் எண்ணெய்களையும் நாம் பயன்படுத்தக்கூடாது. இயற்கையான எண்ணெயை நாம் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். அதற்கு குங்குமாதி தைலம் சிறந்தது எனக் கூறப்படுகிறது. மற்ற ஃபேஷியல் எண்ணெயை விட இதில் குங்குமப்பூ பீச் கர்னல் மற்றும் ரோஜா எண்ணெய்களின் கலவையுடன் தயாரிக்கப்படுவதால் முகப்பொலிவு ஏற்படும். இதில் வேறு என்ன நன்மைகள் உள்ளன என இங்கு அறிந்துகொள்வோம்.


குங்குமாதி தைலம் எரிச்சல் மற்றும் அழுத்தமான சருமத்தை மென்மையாக்குவதற்கும், டோனிங், ஈரப்பசை தக்கவைத்தல் ஆகியவற்றிற்கு சிறந்தது.


முகத்தில் ஈரப்பதம் இழப்பைத் தடுக்க உதவுகிறது. இதோடு இயற்கையான எண்ணெய் சுரப்பிகளைப்போல செயல்படுவதன் மூலம் சருமத்தை சமநிலையாக வைத்திருக்கிறது.


முதுமையின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்த்துப்போராடுகிறது. மேலும் 40 வயதிலும் 20 வயதுபோன்ற தோற்றத்தை அளிக்கும்.



நம்முடைய தோலின் இழந்த பொலிவை மீட்டு, புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. இது தோல் அழற்சி, டோனிங் மற்றும் பிக்மென்டேஷன் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கிறது.


சரியான ஃபேஷியல் எண்ணெயைப் பயன்படுத்துவது உங்கள் சருமத்தின் எண்ணெய் தன்மையை குறைக்கும்.


குறிப்பாக தோலுக்கு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் தேவை என்பது சரியான முடிவுதான்.  ஆனால், உங்கள் சருமத்துக்கு எந்தவொரு புதிய தயாரிப்பை பயன்படுத்திற்கு முன்னதாக தோல் மருத்துவர்களை ஆலோசிப்பது நல்லது.