டீ ப்ரியர்களுக்கு.. இது ஷாக்கிங்கான நியூஸ் ஆக இருக்கும். சமூக வலைதளங்களில் அவ்வபோது விசித்திரமான உணவுகள் வைரல் ஆகும். சாக்லேட் தோசை, ஐஸ் க்ரீம் தோசை, ஓரியோ மேகி, Fanta மேகி என்ற வரிசையில் புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது. அது என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள். 

புதிதாக உணவு தயாரிக்கிறோம் என்று பெயரில் சிலர் Weird என்று சொல்லும் அளவில் இருக்கிறது என ஒருசாரார் சொல்கின்றனர்.  அப்படி என்ன இப்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது என்றால், ‘ Maggi in Chai'. என்னது டீயில் மேஜியா? டீ சாப்பிடும்போது, சூடாக வாழைக்காய் பஜ்ஜி, பக்கோடா, முறுக்கு, மிக்சர் என சாப்பிடும் வழக்கம் உண்டு. இதுவும் சிலரின் தேர்வாக இருக்காது. அப்படியிருக்கையில், சூடான டீயில் மேகி சேர்த்து சாப்பிடுவது எப்படி இருக்கும் என ஸ்விக்கி ஒரு போஸ்ட் செய்துள்ளது. “Maggi with chai or Maggi in chai? என கேட்டுள்ளது. 

நெட்டிசன்ஸ் ரியாக்சன்:

டீயில் மேகி சேர்த்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று பதவிட்டுள்ள போஸ்ட்டில் பலரும் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர் ‘ இப்படியான ஒன்றை கண்டறிந்தவர்களை சபிக்கிறேன்.’ என்று கமெண்ட் செய்துள்ளார். ‘ இது உண்மையா’? ‘இது ஆரோக்கியமானதா?’ என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். இது க்ரைம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். ‘இதெல்லாம் க்ரீயேட்டிவுன்னு யாரும் சொல்லிராதீங்க’ இது வேஸ்ட் ஆஃப் டைம்’ என்று ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். 

இன்னொருவர், டீ உடன் பானி பூரி சாப்பிடுவது போல புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். பானிபூரியில் பானிக்கு பதிலாக டீ சேர்த்து சாப்பிடுவதை டிரை பண்ணி பாருங்க என்றிருந்தார். 

ஒருவர்,” சமூக வலைதளத்தில் வைரலாகும் சிலவற்றை மக்கள் ட்ரை பண்ணும் பழக்கம் இருக்கிறது. இப்படி டீ உடன் மேகி நூடுல்ஸ் சேர்த்து பதிவிடுவதால் அதை மற்றவர்கள் முயற்சி பண்ணி பார்ப்பார்கள். எவ்வளவு வேஸ்ட் ஆகும். இப்படி செய்வதி நிறுத்துங்க.” என்று பதிவிட்டிருந்தார். 

இன்னொரு போஸ்ட்டில் Momo-விற்கு சாஸ் உடன் பேஸ்ட் சேர்த்து சாப்பிட்டால் என்பதுபோன்ற புகைப்படமும் பதிவிடப்பட்டுள்ளது.