பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட வேண்டும் என , இரண்டு காதுகளையும் அரைகுறையாக பிடித்து வைத்து கொண்டு, லேசாக குனிந்து விட்டு இது தான் தோப்புக்கரணம் என இன்று பலரும் சொல்கிறார்கள். ஆனால் இந்த தோப்புக்கரணம் போடுவதற்கு சரியான வழி முறைகள் இருக்கிறது. அனைவராலும் இதை செய்ய முடியாது.  இப்படி பல்வேறு தகவல்களுடன்,


 


தோப்புக்கரணம் போடும் முறை -தோள்பட்டை அகலத்திற்கு இரண்டு கால்களையும் விரித்து  வைத்து கொள்ள வேண்டும். வலது கையால், இடது காதின்மடலை  இரண்டு விரலால் பிடித்து கொள்ள வேண்டும். அதே போல், இடது கையால் வலது காதின் மடலை பிடித்து கொள்ள வேண்டும். மெதுவாக கீழே உட்கார்ந்து, எழுந்திருக்க வேண்டும். கீழே உட்காரும் போது மூச்சை வெளியிட வேண்டும். மேலே எழும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும்.இதே போன்று ஒருநாளைக்கு 10 லிருந்து 100 முறை செய்யலாம். இது அவரவர் விருப்பத்திற்கும், பிட்னெஸ் சார்ந்தது.


தினம் தோப்புக்கரணம் போடுவதால் வரும் பயன்கள் - உடல் தசைகள் எலும்புகள், வலு பெரும். தொப்பை குறையும்.  காது மடல்களை பிடித்து இழுத்து செய்வதால், இது மூளை ஆரோக்கியத்திற்கு மேம்படுத்தும். சிந்திக்கும்  திறன், நினைவாற்றல் ஆகியவற்றை அதிகபடுத்தும். மூளையில் இருக்கும் நியூரான் செல்கள் புத்துணர்வு அடையும். உடல் சுறுசுறுப்பாக  இயங்கும். எலும்பு மூட்டுகளை பலப்படுத்தும். கர்ப்பிணிகள் செய்வதால் அவர்களுக்கு பிரசவ நேரத்தில் உதவியாக இருக்கும். தொடை, மூட்டு பகுதிகளை வலுப்படுத்துகிறது. முதுகு தண்டு வடம் ஆரோக்கியமாக இருக்கும். இது உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும்,  முழுவதும், புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. உடலின் அனைத்து பாகங்களும் சரியாக வேலை செய்ய உதவும். ரிலாக்ஸாக இருக்க உதவும்.




 


யாரெல்லாம் தோப்பு கரணம் போட கூடாது - மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் ,முதுகு  வலி பிரச்சனை இருப்பவர்கள், இதை செய்ய கூடாது. கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும் போது மூட்டு வலி பிரச்னை அதிகம் ஆகும். முதுகு வலி பிரச்சனை இருப்பவர்கள் முன்னோக்கி குனியும் போது முது வலி அதிகமாகும்.


தோப்புக்கரணம் ஆரம்பிக்கும் போது முதல் நாள் அதிகம் கால் வலி இருக்கும். ஆனால் இதை தொடர்ந்து செய்யும் போது கால் வலி இது மாறிவிடும். இதை தொடர்ந்து உங்கள் உடற்பயிற்சியுடன் இணைத்து செய்ய ஆரம்பிக்கலாம். வெறும் வயிற்றில் செய்வது நல்லது. முதலில் ஆரம்பிக்கும் பொது 10 முறை மட்டும் செய்யுங்கள். கொஞ்சம் கொஞ்சம் அதிகமாக்கி கொள்ளலாம்.