கோடைக்காலமும் மற்ற எந்தக் காலத்தையும் போல அழகானதுதான் ஆனால் கொளுத்தும் வெப்பத்தால் மக்களால் அதனை ரசிக்க முடிவதில்லை. சூரியக் கதிர்கள் உங்கள் சருமத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கலாம், குறிப்பாக நாம் எதிர்பார்ப்பதையும் விட அதிகமாகவே நாம் சூரிய வெளிச்சத்துக்கு உட்படுத்தப்படுவதால் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தாவிட்டால், சூரியக் கதிர்வீச்சின் குறுகிய வெளிப்பாடு உங்கள் சருமத்திற்கு சேதத்தை ஏற்படுத்தும். 


சூரிய ஒளியால் தோலின் மேற்பரப்பு அடுக்கு கருப்பாகிவிடுவதால், அந்த நிறமே சூரிய ஒளி பாதிப்பின் முதல் அறிகுறியாகும். கடுமையான, சரிசெய்ய முடியாத தோல் பிரச்சனைகளைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் பயன்பாடு அவசியம். ஒருவேளை மழைக்காலமாக இருந்தாலும் வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டியது அவசியமா  என்றால் ஆம்! நிச்சயம் பயன்படுத்தவேண்டும்.


சூரிய ஒளி உங்கள் சருமத்தை எவ்வாறு பாதிக்கிறது?
சருமம் ஒரு உள்ளார்ந்த தற்காப்பு எதிர்வினையைக் கொண்டிருந்தாலும், நீடித்த சூரியக் கதிர்வீச்சிலிருந்து தற்காத்துக் கொள்ள இந்தப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பிற்பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் மதிய உணவுக்காக நீங்கள் வெளியில் இருப்பது உட்பட. UVA (புற ஊதா A) கதிர்கள் சருமத்தின் வயதாகும் தன்மையை துரிதப்படுத்துகின்றன, UVB (புற ஊதா B) கதிர்வீச்சு உங்கள் தோலை சேதப்படுத்துகிறது.


புற ஊதா (UV) கதிர்வீச்சு மேகங்கள் வழியாகச் சென்று கட்டிடங்கள் மற்றும் வாகனங்களில் உள்ள ஜன்னல்கள் வழியாகவும் உங்களைத் தாக்கும். இயற்கையான கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் இப்படியான பாதிப்பு குறைவாக இருந்தாலும், அதுவும் சருமத்தின் வயதாகும் தன்மையைத் துரிதப்படுத்துகிறது.


முன்கூட்டிய முதுமை மற்றும் தோல் புற்றுநோய் போன்ற நோய்களைத் தவிர்ப்பதற்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் மலிவான வரிசைகளில் சன்ஸ்கிரீன்களே போதுமானதாக உள்ளது.


தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது: 


சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தின் உள் செல்களைத் தாக்கி, தோலில் உள்ள செல்களை பாதிக்கின்றன. இது தோலின் நிறம் மற்றும் தன்மையில் வேறுபாட்டையும் ஏற்படுத்துகிறது. சன்ஸ்கிரீன் சருமம் UV கதிர்வீச்சை உறிஞ்சுவதைக் குறைக்கிறது மற்றும் UV கதிர்வீச்சின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்கிறது.


முன்கூட்டிய முதுமைக்கு எதிராகப் பாதுகாக்கிறது:


சூரிய வெப்பம் சருமத்தை நீர் வற்றிப்போகச் செய்கிறது. அதனால் அது மந்தமாகவும், உயிரற்றதாகவும் மாறுகிறது. மடிப்புகள், நேர்த்தியான கோடுகள் மற்றும் வயதின் பிற அறிகுறிகள் போன்ற அதிகப்படியான சூரிய ஒளியால் ஏற்படும் பிற பிரச்னைகளில் இருந்தும் பாதுகாக்கிறது. சன்ஸ்கிரீன் சருமத்திற்கும் சூரியனுக்கும் இடையே ஒரு எல்லையாக செயல்படுகிறது, இது முன்கூட்டிய தோல் வயதாவதைக் குறைக்கிறது.