வெயில்


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் பதிவானதால் வெப்ப அலை நாட்டையே உலுக்கி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டியுள்ளது. 


இப்படி ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தை கடந்து போவது என்பதற்குள் படாத பாடாகி விடுகிறது. உடலில் நீர்வற்றிப் போவது, சரும எரிச்சல் என பல பிரச்சனைகளை சந்திக்கும்போது தான் நான் நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டிய தேவையை உணர்வோம். கடினமான சூழல்களில் தான் நமது உடல் ஒரு மாற்றத்தை கோருகிறது. இந்த சம்மரில் நீங்கள் எப்படியெல்லம் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் என்பதை மருத்துவர்கள் பலர் தெரிவித்திருப்பதை இந்த தொகுப்பில் காணலாம். 


மருத்துவர்கள் பரிந்துறை


செய்யக்கூடியவை



  • காலையில் எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீரை மொத்தமாக குடிக்கக்கூடாது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் குடிப்பது தான் நல்லது.

  • தண்ணீர் மட்டுமல்ல, ஏதாவது நீர் ஆகாரங்கள் இளநீர், மோர், பழச்சாறு போன்ற ஏதாவது குடித்தால் நல்லது.

  • தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆற வைத்து குடிப்பது நல்லது. உடலில் எவ்வளவு வியர்வை வெளியேறுகிறதோ அதை சரி செய்யும் வகையில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • சர்க்கரை நோய் உள்ளவர்கள், ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைந்த அளவு தண்ணீர் மற்றும் நீர் ஆகாரங்களை சாப்பிடுவது நல்லது.

  •  அதேபோன்று ஜீரணமாகக்கூடிய வேக வைத்த உணவுகளை உண்பது நல்லது. 

  • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இறுக்கமான உடைகளை அணியாமல் காற்றுப் போகும் வகையில் உடைகள் அணிய வேண்டும்.

  • ஷூ, சாக்ஸ், பனியன் போன்றவற்றை 6 மணி முதல் 8 மணி வரை தான் போட வேண்டும்.

  • வெப்ப அதிகமாக இருப்பதால் தினமும் இரண்டு முறை சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

  • வெயிலின் தாக்கம் கண்ணில் படுவதால் கருவிழிகள் சுருங்கிவிடும். அதனால் பாதுகாப்பான கண்ணாடி அணிய வேண்டும். 

  • வெயிலில் வெளியே செல்லும்போது முகத்தை மூடிக் கொள்வதும், தொப்பி அணிந்து செல்வது, முகத்திற்கு சன்ஸ்கிரீம் ஏதாவது பயன்படுத்துவதும் நல்லது. 


தவிர்க்க வேண்டியவை



  • வெயிலினால் மருந்து, மாத்திரைகள் விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. அதனால் அளவுக்கு அதிகமான மருந்துகளை வாங்கி வைப்பதை தவிர்க்க வேண்டும்.

  • அதேபோன்று மாத்திரைகளை கார், பைக் போன்ற இடங்களில் வைக்கக்கூடாது. மாத்திரைகளை பாதுகாப்பாக தேவையான அளவு மட்டும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

  • வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இறுக்கமான உடைகளை அணியக் கூடாது.

  • ஷூ, சாக்ஸ், பனியன் போன்றவற்றை 6 மணி முதல் 8 மணி வரை தான் போட வேண்டும். இல்லையென்றால் உடலில் உள்ள உப்பு பனியன்களில் ஒட்டிக் கொள்ளும். அதன்மூலம் தோல்வியாதி ஏற்படும்.

  • சர்க்கரை நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களுக்கு காலில் உள்ள உணர்ச்சிகள் குறைந்து விடும் என்பதால் கால் சுடுவதும், வலியும் தெரியாது. அவர்கள் செருப்பு இல்லாமல் நடக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.