கோடை காலத்தில் சரும பராமரிப்பு போலவே, உடல் ஆரோக்கியத்திற்கும் பிரத்யேக கவனிப்பு என்பது வேண்டும். நம் செரிமான மண்டலத்தின் செயல்திறன் குறையும். உடலின் வெப்பநிலை சீராக இருக்க வேண்டியது அவசியம். உடலில் குளர்ச்சியாக வைக்க இயற்கையான வழிமுறைகளை கையாள வேண்டும். உணவு முறையிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடுவது, துரித உணவுகள், அதிக காரம் உள்ளிட்டவற்றை உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.


 உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியவை:


கொத்தமல்லி வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும், பெருஞ்சீரகம் விதைகள் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. புதினா உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது, அதே நேரத்தில் சீரக விதைகள் வீக்கம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.


 




கொத்தமல்லி:


இது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவுகிறது. இதனால், உடலின் வெப்பநிலை குறையும்.  புத்துணர்ச்சியும் இருக்க உதவுகிறது. இதனால் செரிமான மண்டலம் மகிழ்ச்சியாக வேலை செய்யும்.



  • ஒரு டீஸ்பூன்  தனியாவை எந்த உணவு சமைத்தாலும் சேர்க்கலாம்.

  • கொத்தமல்லி இலைகளை வெள்ளரி மற்றும் தக்காளியுடன் சேர்த்து சால்ட்  தயாரிக்க பயன்படுத்தலாம்.

  • கொத்தமல்லி சட்னி அடிக்கடி சாப்பிடலாம்.


பெருஞ்சீரகம்: 


 இதில் உள்ள வைட்டமின் சி செரிமானத்தை தூண்டுகிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.





  • சமைக்கும் உளவுகளில் சிறிது பெருஞ்சீரம் தாளிக்கலாம்.

  • பெருஞ்சீரக டீ நல்ல சாய்ஸ்.

  • சாலட் உணவுகள் சாப்பிடும்போது பெருஞ்சீரத்தை பொடித்து அதில் தூவி சாப்பிடலாம்.


சீரகம்:


சீர்+ அகம்- சீரகம் -


உடலின் உட்புறத்தை சீராக்குகிறது என்று பொருள்.  இந்திய சமையலில் இது மிக முக்கியமானது. இதன் நறுமணம், சுவை ஆகியவற்றை விடவும், இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது. கோடைக்காலத்திற்கு ஏற்ற மசாலா.



  • சமையில் தினமும் சீரகம் சேர்க்கலாம்.

  • மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றுடன் சீரகத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.




புதினா:


புதினா ஒரு சிறந்த மூலிகை. இது அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அழற்சி தொடர்பான நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகளை போக்கும். கோடை வெயிலிலும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.



  •  டீயில்  புதினா சேர்க்கலாம்.

  • புதினா சட்னி சாப்பிடலாம்.

  • லெமன் புதினா ஜூஸ் குடிக்கலாம்.


கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டியவைகள்:


சிவப்பு மிளகாய் தூள்:


இதை அதிகப்படியான அளவு எடுத்துக் கொண்டால், வயிறு, தொண்டையில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இது உடல் வெப்பநிலையையும் அதிகரிக்கும். முடிந்தவரையில் காரம் குறைவாக சாப்பிடுவது நல்லது.


பூண்டு:


உடல் எடையை குறைப்பது,  பசியைக் கட்டுப்படுத்துவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து பல நன்மைகள் இதில் உள்ளன. இருப்பினும், குளிர்காலத்தில் இதை அதிகமாக உட்கொள்வது நல்லது, கோடையில் இது உடலின் வெப்பநிலையை உயர்த்தும். ஆகையால், பூண்டை உணவில் குறைவான அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


இஞ்சி:


இஞ்சியில், செரிமானத் திறன் உள்ளிட்ட பல நன்மைகள் இருந்தாலும், கோடையில் இதை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டால், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளையும் இது ஏற்படுத்தும். அதனால்,அதிக அளவு இஞ்சி சாப்பிடுவதை தவிக்கவும். 


கோடை காலத்தில் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு உணவு எடுத்துகொள்வது நல்லது.


வேனிற் காலத்தில் காலை, மாலை என இரண்டு வேளைகளும் குளிக்கவே மனம் விரும்பும். உடலில் வியர்வை அதிகம் கசிவதால் உண்டாகும் அசுத்தத்தைப் போக்கவும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் இரண்டு வேளை குளிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். ஆனால், நாளைக்கு ஒருமுறைக்கு மேல் குளிப்பது உடல்நலனுக்கு நல்லதுஇல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். தினமும் ஒருமுறைக்கு மேல் குளிப்பது உடலுக்கு என்னென்ன கேடு விளைவிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.


அதிகமுறை குளிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன:


ஆரோக்கியமான சருமம் என்பது அதில் உள்ள எண்ணெய் அடுக்குகள் மற்றும் நல்ல பாக்டீரியாக்களை பராமரிக்க உதவுகிறது. அதே சமயம், குளிக்கும்போது சருமத்தை சோப் போட்டு சுத்தம் செய்வோம். அப்போது, உடலில் உள்ள நல்ல பாக்ட்டீரியாக்கள் மற்றும் எண்ணெய் பதத்தை நீக்குகிறது. அதனால்தான், உங்கள் சருமத்தில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் வெளியேறாமல் இருக்க, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குளிக்க வேண்டும் என்பது நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.


குளியலுக்கு பிறகு, தோல் கரடுமுரடாக அல்லது வறட்சியா மாறும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். இதனால் வெளியில் உள்ள பாக்டீரியா எளிதில் உடலில் நுழையும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதனால் தோலில் நோய்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. எனவே, குளித்த உடனே, தோலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மாய்சரைஸர் அப்ளை செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.




மேலும் வாசிக்க..