கோடை வெயில் கொளுத்துகிறது. எவ்வளவு தான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்கவில்லை. உடல் சூடு தாங்கவே முடியவில்லை, கண் எரிகிறது என கோடையின் குமுறுல்கள் தொடங்கிவிட்டன. அதற்கு மட்டுமல்ல வேறு பலவற்றுக்கும் சூப்பரான தீர்வாக இருக்கும் இந்த 5 விதமான உணவுகள்.


வெள்ளரிக்காய்:
 
நம்ம லோ பட்ஜெட் டாக்டர் தான் வெள்ளரிக்காய். அதன் பயன்கள் என்னென்னனு பார்க்கலாம் வாங்க. வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும், உடலைக் குளிரவைக்கும். வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை உண்டு. இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.


யோகார்ட்:


தயிரும் யோகார்ட் டும் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. தயிரானது பாலை காய்ச்சி அதில் வினிகர் அல்லது லெமன் ஜூஸ் கலந்து திரள வைத்து தயாரிக்கின்றனர். இதுவே யோகார்ட் என்றால் லாக்டோ பேசில்லஸ் பல்கரிகஸ், ஸ்ட்ரெப்டோ காக்கஸ் தெர்மோபில்ஸ் போன்ற பாக்டீரியாக்களை கொண்டு பாலை நொதிக்க வைத்து யோகார்ட்டை தயாரிக்கின்றனர். இது ப்ரோபயாட்டிக்(Probiotic) ஆகும். இதில் புரதச்சத்து, கொழுப்புச்சத்து, கல்சியம் மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன.  தயிரோடு ஒப்பிடுகையில், யோகர்ட்டில் புரதச்சத்து அதிகம். கார்போஹைட்ரேட் குறைவு.


தர்ப்பூசணி:


தர்பூசணியில் 90 % அளவுக்கு நீர் உள்ளது. கோடை காலங்களில் இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு (Dehydration) பிரச்னைகள் ஏற்படாது. தர்பூசணியில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காயங்களை விரைவாக குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு. இதிலுள்ள பீட்டா கரோட்டின் , உடலால் வைட்டமின் ஏ வாக மாற்றப்படும்.  இது முடி மற்றும் சருமத்துக்கு மிகவும் நல்லது. இதன் பட்டையைச் சாப்பிட்ட பிறகு தூக்கி எறியாமல், தோலில் தடவலாம். இதில் பாக்டீரியாத் தொற்று மற்றும் அலர்ஜிக்கு எதிரான தன்மை உள்ளது. முகப்பரு பிரச்னைக்கும் இது நல்ல தீர்வு தரும்.


ஓட்ஸ்:


ஓட்ஸில் உள்ள அதிக நார்ச்சத்து, தாவர வேதிப்பொருட்கள் (PHYTOCHEMICALS) உள்ளிட்டவை, மனிதர்களின் உடல்நலனுக்கு ஏற்றவைகளாக உள்ளது மட்டுமல்லாது, ஓட்ஸை எளிதில் சமைக்கூடியதாக உள்ளது. Avena Sativa என்ற தாவரத்தில் இருந்து விளைவிக்கப்படும் உணவுப்பொருளே ஓட்ஸ் ஆகும். ஓட்ஸ் பதப்படுத்தலின்போது, பிரிந்து வரும் வெளிப்புற உறையே, அதன் தவிடு ஆகும். ஓட்ஸ் உணவு வகைகள் அனைத்திலும், ஓட்ஸ் தவிடு உள்ளபோதிலும், அதை தனியாகவும் சமைத்து உண்ணலாம். பிரான் தவிடைக் கொண்டும் பல்வேறு உணவு வகைகள் சமைக்கப்படுகின்றன.


லெமனேட்:


நீரிழிவு நோயாளிகள் தினமும் எலுமிச்சை சாறு குடித்தால் உடலில் ஏற்படும் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும். அத்துடன் உடலுக்கு நீர்ச்சத்து மற்றும் ஆற்றலைத் தருகிறது. எலுமிச்சை நீரின் மிக முக்கியமான ஆரோக்கிய நன்மை என்னவென்றால், இது சிறுநீரக கற்களில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.