மே மாதம் வரும் முன்பே வெயில் இவ்வளவு சுட்டெரிக்கிறது. அப்போது மே மாசம் எப்படி இருக்கும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. மழைக்கு ரெட் அலர்ட் அறிவித்து கேள்விப்பட்டிருப்போம். ஆனால், வெயிலுக்கு ஆந்திராவில் அலர்ட் விட்டிருக்கிறார்கள். சென்னையிலும் இதே போன்றதொரு நிலைமைதான். இந்நிலையில், இந்த வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாப்பதுபோல தலை முடியையும் பாதுகாக்க தேவையான சில ஈஸி டிப்ஸ் இதோ..
மற்ற உடல் பாகங்களோடு ஒப்பிடும்போது தலை பகுதி மிகவும் மென்மையானது. முகம் மற்றும் பிற தோல் பகுதிகளோடு ஒப்பிடும்போது உச்சந்தலையில் அதிக செபாசியஸ் எனும் சுரப்பிகள் உள்ளன. இது அதிக எண்ணெயை வெளியிடும் சுரப்பி.
இந்த வெயில் காலத்தில், உச்சந்தலையில் உள்ள வியர்வை வெளியேறாமல் பாக்டீரியா, எக்சஸ் ஆயில் உருவாகி, தலைப்பகுதியும் அழுக்காக மாறிவிடும். இதனால், உச்சந்தலையில் அரிப்பு ஏற்படும்போது வேறு எந்த வேலையிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது.
இந்நிலையில், நமது உச்சந்தலை பகுதி ஆரோக்கியமாக இல்லை என்றால் சிவப்பு தடிப்புகள், அரிப்பு, பிற பாக்டீரியா தொற்று, பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த ஈஸி டிப்ஸ்களை பின்பற்றவும்.
டிப்ஸ்: 1
ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, ஒரு ஸ்பூன் தேங்காய் துறுவல்களை சேர்த்து, கலவையாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். பின்பு உச்சந்தலையில் முழுவதும், ஈரமான முடி மீதும் தடவவும். 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து தண்ணீரில் கழுவவும். இப்படிச்செய்து வந்தால், உச்சந்தலையை குளிர்விக்கவும் மற்றும் பொடுகு ஏற்படுவதை குறைக்கவும் உதவும்.
டிப்ஸ்:2
ஆரோக்கியமான தலைப்பகுதியை பெற வாரம் ஒரு முறை அல்லது அதற்கு அதிகமான முறை கண்டிப்பாக உங்கள் தலையைக் கழுவ வேண்டும். ஷாம்பூவின் சரியாக பயன்படுத்தி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்த தவறுபவர்கள், எண்ணெய்க்கு பதிலாக ஹேர் சீரம் பயன்படுத்தலாம்.
டிப்ஸ்:3
நீங்கள் வெளியில் அதிகம் சுற்றும் நபராக இருந்தால், வெயிலில் இருந்து பாதுகாக்க ஸ்கார்ஃப் அல்லது வெள்ளை நிற தொப்பிகளை பயன்படுத்தவும். இந்த சம்மரில் தலைமுடி கலரிங், கெராட்டின் ட்ரீட்மெண்ட் , ஸ்மூத்தினிங் போன்றவற்றை தவிர்க்கவும். தலை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்