பாலிவுட்டில் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக மாறியிருக்கிறது ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூரின் திருமணம் குறித்தான தகவல்கள். ஆல்யா மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு முதலாக காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் கடந்த ஓரிரு வருடங்களாகவே இருவரும் , தங்களின் உறவு குறித்து மேடைகளிலும் , நேர்காணல்களிலும் வெளிப்படையாகவே பகிர்ந்து வருகின்றனர். ஆல்யா மற்றும் ரன்பீர் கபூர் ஜோடியின் திருமணம் எப்போது என பலரும் கேட்டு வந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது என்ற செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ரன்பீர் கபூரின் வீடு பூக்களால அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.







அதோடு வீடு முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்னதாக ரன்பீரின் வீட்டில் மர சாமான்கள் வந்து இறங்கியிருந்த செய்திகளும் வெளியானது.  அதே போல நேற்று ரன்பீரின் சகோதரி ரித்திமா கபூர் சாஹ்னி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மும்பைக்கு வந்திருக்கிறார். அவர் திருமணத்தில் கலந்துக்கொள்ளதான் வந்திருக்கிறார் என்ற செய்தியும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. திருமணத்திற்கு முன்னதான விழாக்களை ஆர்.கே.ஸ்டூடியோவில் நடத்தவுள்ளார்களாம் . அதற்கான ஏற்பாடுகளும் , அலங்காரங்களும் அங்கும் செய்யப்பட்டிருக்கிறது. திருமணத்தை ரன்பீரின் வீட்டில்தான் நடத்தவுள்ளார்களாம். ஏப்ரல் 13 முதல் வருகிற  ஏப்ரல் 17 ஆம் தேதி வரை திருமண கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனால் திருமணம் ஏப்ரல் 14ம் தேதியான இன்று நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது


சமீப காலமாக பாலிவுட் பிரபலங்கள் தங்களது திருமணங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவது இல்லை.  நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மட்டுமே கொண்டாட விரும்புகின்றனர். பத்திரிக்கைகளை அழைப்பதையும் தவிர்த்து வருகின்றனர். அண்மையில் திருமணம் செய்துக்கொண்ட கரீனா - விக்கி தம்பதிகளும் இப்படியாகத்தான் திருமணம் செய்துக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டனர். இந்நிலையில் அதே பாணியை ரன்பீர் - ஆல்யாவும் பின்பற்றுவதாக தெரிகிறது. ரன்பீர் - ஆல்யா திருமணத்தில் சுமார் 200 பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது. கடந்த தீபாவளி பண்டிகை அன்று ஆல்யா ரன்பீர் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.