Clove Tea | உடல் எடை, டீடாக்ஸ்.. கிராம்பு டீயில் இத்தனை நன்மைகளா? மிஸ் பண்ணாம படிங்க..

Clove Tea Benefits: பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம் இருந்தால் கிராம்பு டீ குடிக்க வேண்டும். உண்மையிலேயே இது இந்தப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.

Continues below advertisement

கிராம்பு என்றாலே பற்களுக்கானது என எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் கிராம்பில் அந்தப் பயன் மட்டுமில்லை இன்னும் பல பயன்கள் இருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

Continues below advertisement

  • கிராம்புக்கு உடலை சூடுபடுத்தும் தகுதி உள்ளதால்.இதனை பனிக்காலத்தில் உண்பது நல்லது. உடலை கதகதப்பாக வைத்திருக்க உதவும்.
  • எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவும்
  • கிராம்பு செரிமானத்தை மேம்படுத்தி உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதனுடன் இதை குடிப்பதன் மூலம் உடலில் சக்தி கடத்தப்பட்டு சுறுசுறுப்பாக இருக்கும்.
  • பற்களில் வலி, ஈறுகளில் வீக்கம் இருந்தால் கிராம்பு டீ குடிக்க வேண்டும். உண்மையிலேயே இது இந்தப் பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இதனுடன், இது வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் கொல்லும்.
  • கிராம்பு தேநீர் உடலை நச்சுத்தன்மையை நீக்குகிறது. இது தவிர, சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்தி, பூஞ்சை தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. 

அனைத்துக்கும் மேலாக, இது உடலுக்கு விட்டமின் இ மற்றும் விட்டமின் கே-வுக்கான சிறந்த ஊற்றாக விளங்குகிறது

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola