பெரும்பாலும் ஆரோக்கியமான உணவுகள் லிஸ்டில் ஓட்ஸ் இருக்கும். டயட், உடல் எடை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருப்பவர்களுக்கும் ஓடஸ் சிறந்த தேர்வாக இருக்கிறது. ஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் ஸ்மூத்தி அதோடு ஓட்ஸ் Pancake ருசியாக இருக்கும்.
ஓட்ஸ் Pancake
என்னென்ன தேவை?
ஓட்ஸ் - ஒரு கப்
கோதுமை மாவு - அரை கப்
மோர் அல்லது பால் - ஒரு கப்
முட்டை - 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
துருவிய கேரட் - அரை கப்
பொடியாக நறுக்கிய குடை மிளகாய - அரை கப்
உப்பு - தேவையான அளவு
சீரக தூள் - அரை டீ ஸ்பூன்
மிளகாய தூள் - ஒரு டீ ஸ்பூன்
வெண்ணெய் - சிறிதளவு
செய்முறை
ஓட்ஸை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, முட்டை சீரக தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், குடை மிளகாய், துருவிய கேரட், மிளகாய் பொடி, உப்பு அனைத்தையும் போட்டு ஒன்றாக கலக்கவும். இதோடு தேவையான அளவு பால் அல்லது தயர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
அடுப்பில் மிதமான தீயில் வைத்து தோசைக் கல் சூடானதும் மாவில் சிறதளவை எடுத்து தடிமனான தோசை போல ஊற்ற வேண்டும். வெண்ணெய் / நெய் சேர்த்து கொள்ளலாம். இருபுறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சாப்பிடலாம். ஓட்ஸ் Pancake ரெடி. இதையே இனிப்பாக வேண்டுமென்றால் ஓட்ஸ், முட்டை, தேன், வாழைப்பழம், பால் சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றி எடுத்தால் ஸ்வீட் ஓட்ஸ் Pancake ரெடி.
பிரெட் Pancake
என்னென்ன தேவை?
பிரெட் துண்டுகள் - 6
முட்டை - 3
பால் - 2 கப்
வாழைப்பழம் - 1
உப்பு - தேவையான அளவு
தேன் - தேவையான அளவு
வெண்ணெய்/ நெய்/ ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
செய்முறை
பிரெட் துண்டுகளை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, வாழைப்பழம், பால், தேன், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். தோசைக் கல் சூடானதும் அதில் மாவு கலவையை எடுத்து ஊற்றி, வெண்ணெய் சேர்த்து நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான பிரெட் Pancake ரெடி. சாக்லெட் சிரப் சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் ஓட்ஸ்:
rolled oats-ஐக் கொண்டு தேங்காய் மற்றும் மசாலாப்பொருள்களைப் பயன்படுத்தி செய்யக்கூடிய துரித காலை உணவு தான் தேங்காய் ஓட்ஸ். தயிருடன் சேர்ந்து இதனைச் சாப்பிடலாம்.
ஓட்ஸ் முட்டை ஆம்லெட்:
காலை உணவிற்கு முட்டை ஆம்லெட்டுகளை வெறும் 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இதே போன்று ஓட்ஸ் இட்லி, ஓட்ஸ் ஊத்தாப்பம், ஓவர்நைட் ஓட்ஸ், காய்கறி ஓட்ஸ் கஞ்சி, உலர்ந்த பழங்கள் கொண்ட ஓட்ஸ் கஞ்சி, சாக்லேட் ஓட்ஸ், ஓட்ஸ் கீர் அல்லது ஓட்ஸ் பாயாசம் போன்ற பல்வேறு ரெசிபிகளை காலை உணவாக செய்யலாம்.
ஓட்ஸ் நல்லதா?
சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஆரோக்கியமானதா? நீரிழிவு நோய்க்கு ஓட்ஸை உண்பது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் என நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஓட்ஸ் முக்கியமாக உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் உள்ளன. ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், "ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது. இந்த கரையக்கூடிய நார்ச்சத்துகள் குடலில் உணவின் போக்குவரத்து நேரத்தை அதிகரிக்கவும் குளுக்கோஸ் உறிஞ்சுதலை குறைக்கவும் உதவுகின்றன." என்கின்றனர்.