முடி உதிர்வு பிரச்சனையால் பெரும்பாலானோர் அவதிப்படுகின்றனர். இதனால் சிலருக்கு மன அழுத்தம் கூட ஏற்படுகின்றது. மேலும் முடி உதிர்வு பிரச்சனையை சரி செய்ய சிலர் விலை உயர்ந்த எண்னெய்களையும் ஷாம்புகளையும் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது பலன் கொடுக்குமா என்பது கேள்விக்குறி தான்.


முடி வளர்ச்சிக்கு முடியை முறையாக பராமரிப்பது அவசியம் தான். அதே நேரத்தில் ஊட்டச்சத்தும் மிக அவசியம் ஆகும். சிறுதானிய வகைகள், காய்கறிகள், கொட்டை வகைகள் உள்ளிட்டவை முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது. ஆளி விதை, பாதாம் உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பொடி முடி வளர்ச்சிக்கு உதவும் என கூறப்படுகிறது.


1. ஆளி விதைகள்:


ஆளி விதையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முடியை பளபளப்பாக வைத்திருக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் பயன்படுவதாக கூறப்படுகிறது. 


2. சணல் விதைகள்:


சணல் விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவை உணவில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களைச் சேர்க்க உலகெங்கிலும் உள்ள பல்வேறு மருத்துவ நடைமுறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் சணல் விதை எண்ணெயில் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை முடியை பளபளப்பாகவும் பாதுகாக்கவும் உதவுகின்றன.


3. எள் விதைகள்:


எள் விதையில் ஒமேகா-3, ஒமேகா-6 போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஊட்டச்சத்து நிறைந்த எள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என சொல்லப்படுகிறது. 


4. சூரியகாந்தி விதைகள்:


சூரியகாந்தி விதைகளில் காமா-லினோலெனிக் அமிலம் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும்  உங்கள் இழைகளை ஆழமாக சீரமைக்கவும், செயலற்ற மயிர்க்கால்களைத் தூண்டவும் உதவும் என சொல்லப்படுகிறது. 


5. பூசணி விதைகள்:


இதில் வைட்டமின் ஈ மற்றும் லினோலிக் உள்ளது, இது ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் முடி உதிர்தலில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் என சொல்லப்படுகின்றது. 


6. பாதாம்:


பாதாமில் வைட்டமின் பி7 , வைட்டமின் ஈ, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.  இவை அனைத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு இன்றியமையாதவை ஆகும். இவை உங்கள் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிப்பதுடன், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.


மருந்தளவு:


மேற்கண்ட பொருட்களை சம அளவு எடுத்து பொடியாக அரைத்து ஒரு கண்ணாடி குடுவையில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் 30 கிராம் அளவு பொடியை, ஒரு கிளாஸ் பாலுடன் கலந்து தினமும் உட்கொள்ளலாம் என கூறப்படுகிற்து. இவற்றை மிதமாக பயன்படுத்துவது நல்லது என கூறப்படுகிறது. 


குறிப்பு:


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.