Skincare Tips: கொளுத்தும் வெயில்... சரும பராமரிப்பு பற்றிய கவலையா? கற்றாழை ஜெல் இருக்கே..!

Skincare Tips கற்றாழையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. இது சருமத்திற்கும், கேசத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது.

Continues below advertisement

நம் பாரம்பரியத்தில் கற்றாழையின் பயன்பாடு என்பது நீண்ட காலத்திற்கு முன்பிலிருந்தே இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.  கிராமங்களில் எல்லாருடையை வீடுகளிலும் கற்றாழை இருக்கும். வயல்களில் தானாக பல வகையான கற்றாழைகள் முளைத்திருக்கும். இதில் உள்ள பல்வேறு சிறப்பு குணங்கள் காரணமாக பல்வேறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு  நல்ல தீர்வாக இருக்கிறது.

Continues below advertisement

தீக்காயம், குடல்புண், சருமம் சார்ந்த பிரச்சனைகள், தலை முடி வளர என உள்ளிட்ட பலவற்றிற்கு இதைப் பயன்படுத்தலாம். இதன் பயன்பாடு பட்டியல் நீளும். இன்றைய சந்தையில், அழகுசாதன பொருட்கள், உணவு சார்ந்த பொருட்கள், உடல் எடை குறைக்க என பல்வேறு துறைகளில் இதை பயன்படுத்தி வருகின்றனர்.க்ஷ

கற்றாழை:

அன்றைக்கு வீட்டு வைத்தியத்தில் இடம்பெற்ற ஒரு மருத்துவக் குணமுள்ள குறுச்செடி, இன்றைக்கு பெரிய லாபம் ஈட்டும் வியாபார பொருளாகிவிட்டது. கற்றாழைச் செடி கிடைக்காதாவர்கள், அதிலிருந்து உணவு தயாரிக்க நேரம் இல்லாதவர்கள் கடைகளில் இருக்கும் க்ரீம்கள், கற்றாழை ஜூஸ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

ஆனால், நீங்கள் சிறிய தொட்டியில் வளர்க்கும் கற்றாழைக்குள் பல நன்மைகள் ஒளிந்திருக்கிறது. அதன் பயன்பாடும் அதிகம். கற்றாழையில் இருந்து உணவு தயாரிப்பதும் எளிமையானதுதான். கோடைக் காலம் தொடங்கியாச்சு. கற்றாழை உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.  அப்படியிருக்க, நம் உடலை குளிர்ச்சியுடன் வைத்திருக்க கற்றாழை சிறந்த சாய்ஸ்.

கற்றாழை மோர்:

பொதுவாக கற்றாழையின் ஜெல்லை எடுத்து அதில் ஜூஸ் தயாரித்து பருகலாம். மசாலா மோர் உடன் கற்றாழையை சேர்த்து அரைத்தால் ‘கற்றாழை மோர்’ ரெடி! இதுமட்டுமின்றி நீங்கள் கற்றாழையில் சாம்பார், காரக்குழம்பு, சப்ஜி செய்யலாம். கற்றாழையை மசாலா கலந்த ஒன்றாட சாப்பிட விரும்புவர்களுக்கு இது நல்ல சாய்ஸ்.

உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உணவு முறைகளில் மாற்றம் செய்வதுபோலவே, சரும பராமரிப்பிற்கும் கற்றாழையை பயன்படுத்தலாம்.

கற்றாழையும் சரும் பரமாரிப்பும்

கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்டரைசர். இதன் காரணமாகவே அழகுசாதன பொருட்களில் அதிகளவில் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. சன் ஸ்கிரீன், லோசன் உள்ளிட்டவைகளில் கற்றாழை பயன்படுத்தப்படுத்தபடுகிறது. சரும பராமரிப்பில் கற்றாழையில் முக்கியத்துவம் வாய்ந்தது. சருமத்தை ஈரப்பத்தத்துடன் வைத்துகொள்ள உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. சிலருக்கு கற்றாழை அலர்ஜி தரக்கூடியது என்பதால் தேவையெனில் மருத்துவரை அணுகுவது நல்லது.

கோடையில் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சூரிய கதிர்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு கற்றாழை  பயன்படும். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள தண்ணீர் சத்து சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்கள்:

கற்றாழையில் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதன் காரணமாக அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் மனித உடலை சேதப்படாமல் பாதுகாக்க உதவுகின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கின்றன.

கற்றாழை தோல் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்கிறது. கற்றாழையின் பல நன்மைகள் தோலுடன் தொடர்புடையவை. அதிகளவிலான ஆண்டி-ஆக்ஸிடன்ஸ் சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

கற்றாழையின் பயன்கள்:

  • கற்றாழை வெப்பத்தைத் தணிக்கும்.
  • இது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருக்கிறது.
  • கற்றாழை குடல் சுவர்களை புண்களிலிருந்து பாதுகாக்கிறது.
  • கற்றாழையை சாப்பிடுவது உடல் செல்களின் நலனைப் பாதுக்காக்கிறது.
  • கற்றாழையில் உள்ள ஆண்டி ஆசிட்னஸ் உடலுக்கு நன்மை தருபவை.
  • மூட்டுவலி, வாய் ஆரோக்கியத்திற்கு கற்றாழை சிறந்தது.
  • சத்துமிக்க கற்றாழையைச் சாப்பிட்டால் சருமம் ஆரோக்கியமுடன் இருக்கும்.
  •  கற்றாழை சாற்றை மோரில் கலந்து குடித்து வந்தால், உடல் சூட்டினால்  முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola