ஒரு பொருள் வாங்க கடைக்கு செல்லும்போது, அல்லது அதிகமாக விளம்பரங்களில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான வார்த்தை ஆர்கானிக். இது எதை குறிக்கிறது என்றால்,  எந்த விதமான கெமிக்கல் சேர்க்காமல் தயாரிக்கப்படும் பொருள்கள்தான் ஆர்கானிக், அதே போல் உணவு பொருள்களில், எந்த விதமான மரபணு மாற்றம் செய்யாமல், பூச்சிக்கொல்லிகள் , ரசாயனங்கள், களைக்கொல்லிகள் பயன்படுத்தாமல் முற்றிலும் இயற்கையான முறையில் விளைவிக்கும் பொருள்கள் தான் ஆர்கானிக் என அழைக்கப்படும். ஆர்கானிக் என்ற சொல்ல வணிக ஆடம்பரமான சொல்லாக உள்ளது. பயன்படுத்தும் டிஷர்ட், பைகள் முதல் சோப்பு, அழகு சாதன பொருள்கள் வரை ஆர்கானிக் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு ஆர்கானிக், இதை எப்படி கண்டறிவது?


ஒவ்வொரு துறையிலும் ஆர்கானிக் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அழகுத்துறையில் இது எந்த அளவிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பற்றி அழகு துறை நிபுணர் நம்முடன் பகிர்ந்து கொண்ட தகவல்படி, இந்தியா ஆர்கானிக் என்பதை இன்னும் முழுமையாக நிர்ணயிக்க நீண்டதூரம் செல்ல வேண்டி உள்ளது. பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் ஆர்கானிக் தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான சரியான சட்டத்தை இப்போதுவரை லீகலாக வழங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் எதுவும் தவறாக நடக்க கூடாது என்பதை உறுதிப்படுத்த கடுமையான சட்டபூர்வமான விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


அழகுசாதன பொருள்கள் ஆர்கானிக்தானா என எவ்வாறு கண்டறிவது?


 அழகுசாதன பொருள்களை மொத்தம் 4 வகைகளாக பிரித்து உள்ளனர். 100% ஆர்கானிக் தயாரிப்புகள். அதாவது எந்த விதமான கெமிக்கல் சேர்க்காமல் தயாரிக்கப்படும். 95% ஆர்கானிக் பொருளும், குறைந்த அளவு வேதிகள் கலந்து இருக்கும். 70% ஆர்கானிக் நிறைந்தும், பரிந்துரைக்கப்பட்ட அளவு வேதிகள் கலந்து இருக்கும்.  70% ஆர்கானிக் நிறைந்தும், மீதம் கெமிக்கல் கலந்தும் இருக்கும். இந்த நான்காவது வகையில், ஆர்கானிக் என அட்டையில் குறிப்பிட அனுமதி இல்லை.


இந்த ஆர்கானிக் என விளம்பரப்படுத்தும் பொருள்களை வாங்கும்போது , கவனமுடன் அதில் கலந்து இருக்கும் பொருள்களை பற்றி தெரிந்து கொண்டு பின்னர் வாங்க வேண்டும். சில பொருளாக வெறும் 3% மட்டும் ஆர்கானிக் கலந்து இருக்கும். ஆனால் ஆர்கானிக் என சந்தைப்படுத்தப்படும். மிகவும் கவனமுடன் வாங்க வேண்டும். வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து சருமப் பராமரிப்பு செய்வதற்கும் , இந்த மாதிரியான ஆர்கானிக் அழகு சாதன பொருள்கள் வாங்குவதற்கும் என்ன வித்தியாசம்


வீட்டில் இருக்கும் பொருள்கள் பயன்படுத்தினால் நீண்ட காலம் ஆகும் நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்க என நம்பி இது போன்ற ஆர்கானி கிரீம் வகைகளை பயன்படுத்த தொடங்குவார்கள். ஏதுவாக இருந்தாலும் ஒரே முறை பயன்படுத்தினால் மட்டும் போதாது. குறைந்தது 15-30 நாட்கள் பயன்படுத்தினால் தீர்வை பார்க்க முடியும்.