சரும ஆரோக்கியத்திற்கு வைட்டமின் E (Vitamin E) முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் அதிக அளவில் இருப்பதால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ளும். சருமத்தை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள் வைட்டமின் E அதிகமுள்ள உணவுகள் மற்றும் வைட்டமின் E எண்ணெய் உள்ளிட்டவற்றை சரும பராமரிப்பு பழக்கத்தில் அவசியம் இடம்பெற வேண்டியது அவசியம் என சரும பராமரிப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சரும பராமரிப்புக்கு...
வைட்டமின் E சருமத்தை ஈரப்பத்துடன் பராமரிப்பதுடன், சருமம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும், நச்சுக்களை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. இதனால்தான், சன் ஸ்கிரீன் லோஷன் அல்லது கிரீம் உள்ளிட்டவைகளில் வைட்டமின் E இருப்பதை மட்டுமே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
முகத்திற்கு பயன்படுத்தும் கிரீம்களில் வைட்டமின் E இருப்பதாக இருந்தால் ரசயானங்கள் இருக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இயற்கையாக முகம் பொலிவுடன் இருக்க வைட்டமின் E மிகவும் அவசியாமாக இருக்கிறது.வைட்டமின் E உள்ள கிரீம்கள் அல்லது லோஷன் தோலில் சுருக்கும் ஏற்படுவதைக் குறைக்கும். இது சிறந்த மாய்ஸரைசராக பயன்படுகிறது.
முடி வளர்ச்சிக்கு..
வைட்டமின் E முடி உதிர்தல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு. உச்சந்தலையில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்க உதவும். தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் E எண்ணெய் அல்லது வைட்டமின் E காப்சியூல் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்தல் குறையும். தலை குளிர்ச்சியுடன் இருக்கவும் இது உதவும்.
இதோடு முடி வளர்ச்சிக்கு இரும்புச்சத்து மிகுந்த உணவுகளை டயட்டில் இருக்கட்டும். போதுமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஸ்க்ரப்..
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்தை ஆரோக்கியத்துடன் வைக்கிறது. இதை தயார் செய்ய, சில துளிகள் வைட்டமின் E மற்றும் சர்க்கரை உடன், ஆலிவ் எண்ணெயை சேர்க்கவும். இந்த பேஸ்டை சருமத்தில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். சர்க்கரை ஒரு எக்ஸ்ஃபோலியேட்டிங் ஏஜெண்டாக செயல்படுகிறது.
உணவு ஆரோக்கியம்..
ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது உங்களது சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இயற்கையாக உணவு முறை, ஜங்க் உணவுகளைத் தவிர்ப்பது, நேரத்திற்கு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது, தண்ணீர் அதிகம் குடிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கியமான சருமம் சிரிக்கும்.
உடற்பயிற்சி
சரும பராமரிப்பிற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடலுள்ள ஹார்மோன்கள் சமநிலை, குடல் ஆரோக்கியம் உள்ளிட்டவற்றை பாதுகாக்க உடற்பயிற்சி செய்வது உதவும்.
தூக்கம்
சீரான உடற்பயிற்சி, சரிவிகித உணவு ஆகியவற்றை செய்து வந்தாலும் போதுமான அளவு தூக்கம் ரொம்பவே அவசியம்.
நெல்லிக்கனி
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் ஒரு சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட். நெல்லிக்கனியில் 80% நீர் சத்தும், புரதம், மாவுச் சத்து, நார் சத்து, வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்களும் உள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோடின், வைட்டமின் பி மற்றும் சி கொண்டதோடு காலிக் அமிலமும் பாலிபீனாலும் உள்ளது.இன்று ஆயுர்வேத மருந்தாகவும் இருந்து வருகிறது.