உடல் ஆரோக்கியத்தில் நம் அனைவருக்குமே மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கும். அப்படியான நிலையில் எடை பராமரிப்பு என்பது நம்முடையா வாழ்க்கையில் மிகவும் முக்கியம். வயதுக்கேற்ற எடையை பேணுவது என்பது மிகவும் அவசியமானதாகும். இப்படியான நிலையில் எடை அதிகரித்தால் அதனைக் குறைக்க ஜிம்முக்கு செல்வது தொடங்கி டயட் இருப்பது வரை பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இவற்றில் சில கைகொடுக்கலாம். சில தோல்வியில் முடிவடையலாம். அவற்றிற்கு நாம் அதனை சரியாக பின்பற்றாமல் இருப்பது மட்டுமே காரணமாக சொல்லப்படும். ஆனால் நம்முடைய உடலுக்கு எதனை ஏற்க வேண்டும், ஏற்கக்கூடாது என்பது நன்றாகவே தெரியும். அதனால் மாற்று வழிகளை நாடலாம். அதில் ஒன்றைப் பற்றிக் காணலாம். 

Continues below advertisement

வேறு ஒன்றுமில்லை. தினமும் காலையில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாம்.  இதனால் உடலின் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. சர்க்கரை அளவை சமப்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது என ஏராளமான நன்மைகள் உள்ளது. இலவங்கப்பட்டை தண்ணீர் ஆக்ஸிஜனேற்றிகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதனால் செரிமானம், எடை மேலாண்மை, இரத்த சர்க்கரை அளவுகள் பராமரிப்பு என அனைத்து விதமான நன்மைகளை வழங்குகிறது.

வளர்சிதை மாற்றம் அதிகரிப்பு 

வெறும் வயிற்றில் காலையில் நாம் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். இது உடலின் ஆற்றலை அதிகரிக்கும். இதனால் கலோரி நுகர்வு அதிகரிப்பதால் கொழுப்பு குறைகிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

Continues below advertisement

எடை குறைப்பு

மற்றவற்றைக் காட்டிலும் இலவங்கப்பட்டை நீர் ஒரு சிறப்பான பானமாகும். இது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கிறது. மேலும் பசியை கட்டுக்குள் வைக்கிறது. இதனால் எடையை நாம் ஒரே அளவில் பராமரிக்க முடியும். இலங்கப்பட்டை உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. இதனை காலையில் சமச்சீர் உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம். 

இதிலிருக்கும் ஆக்ஸிஜனேறிகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு சேர்மங்கள் உடலில் தொற்றுகள், வைரஸ்கள் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இது வெள்ளை இரத்த அணுக்களின் செயல்பாட்டை ஆதரித்து பருவகால நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. இதனை தொடர்ந்து குடிப்பதால் சளி மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளைத் தடுக்க உதவும். 

இலவங்கப்பட்டை நீரானது செரிமான நொதிகளை தூண்டி வயிற்றில் வீக்கம், அமிலத்தன்மை மற்றும் வாயுவைக் குறைக்கிறது. செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. அது அஜீரணத்தை குறைத்து மலச்சிக்கலை போக்கும். இலவங்கப்பட்டை மூளையின் செயல்பாட்டை தூண்டி நினைவாற்றலை அதிகரிக்கிறது. இதனைக் காலையில் குடிப்பதால் மன குழப்பம் நீங்குகிறது. மேலும் உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. 

இலவங்கப்பட்டை நீர் கல்லீரல் செயல்பாட்டை ஆதரித்து உடலில் இயற்கையான நச்சு நீக்க செயல்முறையை ஊக்குவிக்கிறது. இதனால் இரத்த ஓட்டம் மேம்படுகிறது. சரும பாதுகாப்பிலும் முன்னிலை வகிக்கிறது.