சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சப்பாத்தியை செய்யும்போது பெரும்பாலான சமயங்களில் சாஃப்ட்டாவே வராது. ஆனால் பதமான முறையில் மாவை பிசைந்து வைத்தால் சப்பாத்தி ரொம்ப சாஃப்ட்டா வரும்.


காலை டிபன், இரவு டிபனுக்கு என்ன செய்யலாமனு யோசித்த முதலில் நம் நினைவுக்கு வருவது ஹெல்தி உணவான சப்பாத்திதான். கோதுமை மாவில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும்  பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும், வைட்டமின் பி1,2,பி6 மற்றும் பி9 போன்ற சத்துக்கள் அதிகளவில் நிரம்பியுள்ளதால் அற்புத ஆரோக்கியம் நிறைந்த உணவாக சப்பாத்தி விளங்குகிறது.


பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய  சப்பாத்தியை எப்படி செய்தாலும் சாஃப்ட்டா வராது. இதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் சிரமப்படுகிறீர்களா? அப்படின்னா இந்த டிப்ஸ் உங்களுக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கும். வாங்க தெரிஞ்சுக்கலாம்..



சப்பாத்தி மாவை சுவையாக வைத்திருக்கும் முறை:


நாம் பிசையும் சப்பாத்தி மாவை 24 மணி நேரமும், புதியதாக வைத்திப்பது அனைவருக்கும் சவாலான ஒன்று தான். சில சமயங்களில் மாவு சாம்பல் கலந்த கருப்பு நிறமாக மாறிவிடுகிறது. இதனை வைத்து சப்பாத்தியை செய்யும் போது தட்டையான மற்றும் சுவையில்லாத சப்பாத்திகள்தான் நமக்கு கிடைக்கும். இதனைத் தவிர்க்க இந்த முறையை நீங்கள் இனி பாலோ பண்ணலாம்.


பிலிம் அல்லது அலுமினிய ஃபாயில் பயன்படுத்துதல்:


சப்பாத்தி சுடுவதற்காக தயார் செய்த  மாவை பயன்படுத்தி முடித்த பிறகு,மீதமுள்ள மாவை நாம் பிரிட்ஜில்தான் வைப்போம். ஆனாலும் பிரஷ்ஷான மாவு நமக்கு கிடைக்காது. எனவே குளிர்சாதன பெட்டியில் வைப்பதற்கு முன்னதாக அலுமினிய தகடு அல்லது சுத்தமாக  ஃபிலிம் கொண்டு மூடி வைக்கலாம். இவ்வாறு வைக்கும் போது சப்பாத்தி மாவு எப்போதும் பிரஷ்ஷாக இருக்கும். குறிப்பாக நாம் வைத்திருக்கும் பாத்திரத்தை இறுக்கமாக மூடி காற்று குமிழ்கள் இல்லாமல் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் சப்பாத்தி மாவை ஒரு ஜிப் லாக் பையில் அல்லது காற்று புகாத கொள்கலனில் அல்லது பாத்திரத்தில் சேமித்து வைக்க வேண்டும்.



இதற்கெல்லாம் முன்னதாக, மெல்லிய தீயில் எண்ணெய் அல்லது நெய் கொண்டு தடவி அதை மூடி வைத்து கெட்டுப்போவதைத் தடுக்கலாம். இவ்வாறு செய்யும் போது சப்பாத்தி மாவு கருமையாக்குவதையும், உலர்த்துவதையும் தடுக்க உதவியாக இருக்கும். மேலும் இந்த மாவைப்பயன்படுத்தி செய்யும் சப்பாத்திகள் மென்மையாகவும், புதியதாகவும் இருக்கும். ஒரு நாள் ஆனால் கூட கெட்டுப்பட்டு போகாமல், ஃப்ரெஷ்ஷாக இருக்கும். எனவே இதுபோன்ற எளிமையான முறைகளைப் பயன்படுத்தி சுவையான மற்றும் சாஃப்ட்டான சப்பாத்திகளை இனி வீட்டில் செய்து அசத்துங்கள்.