ஆரஞ்சு பழ சீசன் தொடங்கி விட்டது. ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது. தினம் ஒரு பழம் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும். பழமாக சாப்பிடுவது பிடிக்க வில்லை என்றால் இது போன்ற ஆரஞ்சு ரசம் முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள்
ஆரஞ்சு ரசம் செய்ய தேவையான பொருள்கள்
ஆரஞ்சு - 2
பருப்பு தண்ணீர் - 2 கப்
ப.மிளகாய் -2
மிளகு, சீரகம் - 1 ஸ்பூன் (பொடித்தது)
எண்ணெய் - 1 டீஸ்பூன்
பெருங்காயம், மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை -
- ஆரஞ்சு பழத்தை உரித்து எடுத்து சுளைகளை தனியாக வைத்து கொள்ளவும்.
- 4 சுளைகளை தனியாக எடுத்து வைத்து விட்டு, மீதி இருக்கும் சுளைகளை பிழிந்து ஆரஞ்சு சாறு எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
- கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக வெட்டி வைத்து கொள்ள வேண்டும்.
- பருப்பு தண்ணீருடன், 4 ஆரஞ்சு சுளைகள் , கொத்தமல்லி, மஞ்சள் தூள், பொடித்த மிளகு சீரகம், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- ஒரு கொதி வந்ததும், தேவையான அளவு ஆரஞ்சு சாறை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு வாணலியில், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், கடுகு, பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
- இதோ ஆரஞ்சு பழ ரசம் தயார்.
குறிப்பு - புளிப்பான ஆரஞ்சு சுளைகள் இருந்தால், இது போன்ற ஆரஞ்சு ரசம் எடுத்து கொள்ளலாம்.
ஆரஞ்சு பழத்தில் இருக்கும் ஊட்டசத்துக்கள் - இது சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. இதில் வைட்டமின் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்சத்து போன்றவை இருக்கிறது.
இதை யாரெல்லாம் சாப்பிடலாம் –
- நீர்சத்து குறைவாக இருந்தால் ஆரஞ்சு பழங்களை எடுத்து கொள்வது, நீரேற்றத்துடன் வைக்கிறது.
- இரத்த சோகை இருப்பவர்கள் ஆரஞ்சு பழங்களை எடுத்து கொள்வதால், உணவில் இருந்து இரும்பு சத்து கிடைக்கும்.
- இதில் கால்சியம் சத்து நிறைந்து இருப்பதால், சிறுநீரக கற்கள், சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் இருக்கும்.
- சரும பொலிவுக்கு இந்த ஆரஞ்சு மிகுந்த நன்மைகளை அளிக்கிறது
- ஆரஞ்சு பழங்களை தினம் ஒன்று சாப்பிடுவது எலும்புகள் ஆரோக்கியத்திற்கு உதவும்.
- ஸ்கர்வி போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.