எந்த மனநிலையில் இருந்தாலும் ஒரு காபி குடித்தால் உடனே புத்துணர்ச்சி கிடைக்கும் என்பவரா நீங்கள்? அந்த அளவுக்கு காபிக்கும் நமது உணர்வுகளுக்கும் மிக பெரிய பிணைப்பு  இருக்கிறது. இப்போது அதிகமாக காபி குடித்தால், குறிப்பாக, கஃபைன் அளவு 500 மில்லிகிராம் அளவுக்கு மேல் எடுத்து கொண்டால் உடல் நலத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கலாம்.


தூக்கமின்மை- ஒரு முறை காபி குடித்தால், குறைந்தது 3-4 மணி நேரம் தூக்கம் வராது. இதே போல் தொடர்ந்து காபி குடிப்பவராக இருந்தால், நாளடைவில் அவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை வரும். தூக்கம் வராமல் இருக்க காபி குடிக்கலாம் என தொடங்கு, இந்த காபி  பயணம் , ஒரு நாளைக்கு குறைந்தது 5- 10 கப் காபி வரை செல்லும். அதனால் ஒரு நாளைக்கு ஒன்று  அல்லது இரண்டு முறை மட்டும் காபி குடிப்பது நல்லது. குறிப்பாக மாலை 6 மணிக்குள் காபி குடிப்பது நல்லது.


வயிறு உப்புசம் - காபி ஒரு லேக்ஸேடிவாகவும் செயல்படுகிறது. அதாவது மலத்தை வெளியில் தள்ளுவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காலை கடன்களை முடிப்பதற்கு ஒரு  கப் காபி கட்டாயம்  தேவைப்படுகிறது எனில், அவர்களுக்கு செரிமான பிரச்சனைகள் கட்டாயம் வரும். எதுவும் பழக்கமும் தொடங்கி இரண்டு மூன்று நாட்களில் பெரிய வித்தியாசம்  இருக்காது. ஆனால் குறிப்பிட்ட வருடத்திற்குள் இது போன்ற மாற்றங்கள் வரலாம்.




உயர் இரத்த அழுத்தம் - அதிகமாக காபி குடிப்பதால் இரத்த அழுத்தத்தில் அதிகமான மாற்றம் ஏற்படலாம். அதாவது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படலாம். அதனால், உயர் இரத்த அழுத்த பிரச்சனைகள் வரலாம்.  நாளடைவில் இது தொடர்ந்து வந்தால் பக்கவாத நோய் வருவதற்கு காரணமாக அமைத்துவிடலாம்.



படபடப்பு - அதிக அளவில் காபி குடிப்பதால் அவர்களுக்கு, இதய துடிப்பில் பெரிய மாற்றம் வரும். அதாவது, இதய துடிப்பில் அடிக்கடி  அதிகமாதல் அல்லது அளவுக்கு குறைவாக துடித்தல் போன்ற பிரச்சனைகள் வரலாம்.


உடல் சோர்வு - காபியில் இருக்கும் காபின் எனும் வேதி பொருள் உடலில் இருக்கும் நீர்ச்சத்தை குறைக்கும். அதனால் உடல் சோர்வு எளிதாக வரும். பொதுவாக காபி குடிப்பது உடல் சோர்வை போக்குவதற்காக என்று நினைத்து காபி குடித்துக்கொண்டு இருப்போம். ஆனால் அளவுக்கு அதிக எடுத்து கொள்ளும்போது இது உடல் சோர்வுக்கு வழி வகுக்கும்