ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் போது நீரின் தேவை என்பது இன்றியமையாதது ஆனால் உணவுக்கு முன்பா அல்லது பின்பா எப்போது தண்ணீர் உட்கொள்ள வேண்டும் என்பதில் எப்போதும் குழப்பம் இருக்கும்.... மக்கள் உணவு உண்ணும்போது தண்ணீரை உட்கொள்ள வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், நீர் மெலிந்து டைஜெஸ்டிவ் சாறுகளை பலவீனப்படுத்துகிறது, இதனால் உணவுடன் சேர்த்து நீர் உட்கொண்டால் செரிமான செயல்முறையில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட, பல நிபுணர்கள் தண்ணீர் குடிக்க சரியான நேரத்தை ஆய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் நீங்கள் எப்போது தண்ணீர் பருக வேண்டும் தெரியுமா...?







ஆயுர்வேத நிபுணரான டாக்டர் ரேகா ராதாமோனி கூறுகையில், தண்ணீரை உட்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருப்பதாகவும், உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்னும் பின்னும் பொதுவாக நீர் பருகலாம் என்று அறிவுறுத்துகிறார். மேலும், இதுதவிர பருமனான மற்றும் ஒல்லியான நபர்களுக்கு அவர்களது உடல் வாகைப் பொறுத்தும் இந்த நேரம் மாறுபடும் என்கிறார். மருத்துவர் ரேகாவின் கூற்றுப்படி, “ஒருவர் உடல் மெலிந்து, சோர்வாக, பலவீனமாக இருந்தால், ஒட்டுமொத்தமாகவே இளைத்துக் காணப்பட்டால்...அவர் உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்பவர் என்றால் உணவுக்கு 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.” என்கிறார். அதுவே, பருமனானவர்களுக்கு இது முற்றிலும் மாறுபடும், "ஒரு நபர் அதிக எடையுடன் இருந்தால், ஹார்மோன் சமநிலையின்மை அல்லது உடலில் நிறைய கொழுப்பு இருந்தால், அவர் உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பே தண்ணீர் குடிக்க வேண்டும்", என்று அவர் கூறுகிறார்.