தூக்கம் உடலுக்கும் மட்டும் ஓய்வு அளிப்பதில்லை. கண்களுக்கும் மிகவும் தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். ஊட்டச்சத்து குறைபாடு, அதிக நேரம் ஸ்மார்ட்போன், கணினி பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களினால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அப்படி கருவளையம் பிரச்சனை இருப்பவர்களுக்கு தீர்வு காணும் வழிமுறைகளை நிபுணர்கள் சொல்வதை காணலாம்.


கண்களுக்குக் கீழே கருவளையம் ஏற்படுவது ஒரு அழகு பிரச்சனையாக கருத வேண்டாம் என்பதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அவை உடல்நலன் ரோக்கியமின்மையாகவும் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


"வைட்டமின்கள் டி, கே மற்றும் ஈ மற்றும் சில வைட்டமின்கள் குறைபாடு காரணமாக கண்களுக்கு கீழ் கருவளையம் ஏற்படும். அதை கவனித்து அதற்கேற்றவாறு உணவையோ சப்ளிமெண்ட்ஸ்களையோ எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சரும மருத்துவர் தீபாலி பரத்வாஜ் தெரிவிக்கிறார்.


போதுமான அளவு தூங்காமல் இருப்பது, பல நாட்களாக நீடிக்கும் தூக்கமின்மை பிரச்சனை,நீர்ச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றால் கருவளையம் ஏற்படலாம். உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையின் காரணத்தை கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை பெற வேண்டும் என்பதையும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


கவனிக்க:



  • ஒரு நாளைக்கு தேவையான அளவு தூங்குவது மிகவும் அவசியமானது. நாளொன்றுக்கு குறைந்தது 7 மணி முதல் 8 நேரம் தூங்குவது மிகவும் முக்கியம். இது கண்களுக்கு ஓய்வு கொடுப்பதால் கருவளையம் ஏற்படாமல் பாதுகாக்கும்.

  • தூக்கமின்மை பிரச்சனையிருந்தால் மருத்துவரை அணுகலாம். 

  • கோடை வெயிலில் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கையான உணவுகளை சாப்பிடுவது நல்லது. நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் பார்த்துகொள்ள வேண்டும். 

  • கண்களுக்கு பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் அதிகம் ரசாயனம் இல்லாமல் பார்த்துகொள்ளவும்.

  • ஆயுர்வேத மருத்துவம் தெரிவிக்கும்படி, கருவளையத்திற்கு வீட்டிலேயே சில நடைமுறைகளை பின்பற்றலாம். 


உருளைக்கிழங்கு:


கருவளையங்களை நீக்க உருளைக்கிழங்கு பயன்படுத்தலாம். சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடண்ட் இருப்பதால் கருவளையத்தை குறைக்கும். உருளைக்கிழங்கு வட்ட வடிவில் நறுக்கி கண்களுக்கு மேல் 15 நிமிடங்கள் வைக்கலாம். உருளைக்கிழங்கு ஜூஸ் எடுத்து கண்களுக்கு கீழே தடவலாம். வாரத்திற்கு மூன்று முறை இப்படி செய்து வர கருவளையம் நீங்க உதவலாம். 


கற்றாழை:


கற்றாழையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. சரும பராமரிப்பில் கற்றாழையில் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சரும எரிச்சல், காயம் உள்ளிட்டவைகளுக்கு கற்றாழை ஜெல் தடவினால் ஒரு வாரத்தில் காணமல் போய்விடும். கருவளையம் இருக்கும் இடத்தில் கற்றாழை ஜெல் தடவி வந்தால் அது கண்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தில், கருவளையம் குறைய உதவும். இது கண்களை சுற்றி ஈரப்பதத்துடன் இருக்க உதவும்.


பாதாம் எண்ணெய்:


பாதாம் எண்ணெயில் வைட்டமின் இ, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஆன்டி - ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. கண்களை சுற்றி உள்ள சருமத்தை பாதுகாக்க பாதாம் எண்ணெய் உதவும். பாதாம் எண்ணெயில் சில துளிகள் எடுத்து கண்களைச் சுற்றி மசாஜ் செய்து வர கருவளையம் குறைய வாய்ப்பிருக்கிறது. 


குங்கும பூ:


குங்கம் பூ உணவில் சேர்ப்பது ஆரோக்கியம் தரும். அதோடு, அழகு தொடர்பாகவும் இதை பயன்படுத்தலாம். குங்கும பூவை ஒரு சிட்டிகை ஆறிய பாலில் சேர்த்து கண்களுக்கு கீழே தடவி வந்தால் கருவளையம் குறையும்.


க்ரீன் டீ:


க்ரீன் டீ குடிப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். டீ குடித்துவிட்டு அந்த டீ பேகை தூக்கி எரிய வேண்டாம். அதை ஃப்ரிட்ஜில் ஒரு நாள் முழுக்க வைத்து அதை கண்களுக்கு மேல் வைத்து வர கருவளையம் குறையலாம். 


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.