தற்போது பொதுவாகவே திரை பிரபலங்களும் சமையல் செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகிறார்கள். அந்த வகையில் சாக்லேட்- சிப் குக்கீஸ் செய்வது எவ்வாறு? செயல்முறை விளக்கம் அளித்திருக்கிறார் நடிகை தீபிகா படுகோனே. பொதுவாகவே அனைத்து வயதினருக்கும் சாக்லேட் என்றாலே அதிக விருப்பமாக இருக்கும் ,இதில் குழந்தைகள் அதிக அளவில் விரும்புவது சாக்லேட் இந்த சாக்லேட் சிப் குக்கீஸ் பார்த்தாலே நமக்கு வாயில் எச்சி ஊறும். அதன் மொறுமொறுப்பைத் தன்மையும், அதனருகில் சூடாக ஒரு டீ இருந்தால், அதன் சுவையானது நாம் எதிர்பார்க்கும் அளவை விட அதிகமாக இருக்கும். அதன் அருகில் ஒரு ஜில்லென்ற ஐஸ் கிரீம் இருந்தால் அதன் சுவையானது இன்னும் வேற லெவலில் இருக்கும். இதனை பல பிரபலங்கள் ரசித்து ருசித்து செய்தும் காண்பித்துள்ளார்கள்.
இதனைப்பற்றி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்லேட் சிப் குக்கீஸ் எவ்வாறு செய்வது என்பது பற்றியும் அதற்கான விளக்க முறைகளையும் பகிர்ந்து உள்ளார். தீபிகா படுகோனே சாக்லேட் மீதான தனது காதலை சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளிப்படுத்தி வருகிறார். சமையல் புத்தகங்களின் ஆசிரியர் ஷிவேஷ் பாட்டியா, தீபிகாவின் சோகோ-சிப் குக்கீகளுக்கான ரகசிய செய்முறையை நம்மிடம் பகிர்ந்து உள்ளார்.
தேவையான பொருட்கள்:
1. 1/2 கப் வெண்ணெய்
2. 1/2 கப் காஸ்டர் சுகர்
3 . 3/4 கப் பிரவுன் சுகர்
4 . 1/4 கப் ஐசிங் சுகர்
5 . 1 முட்டை + 2 முட்டை மஞ்சள் கரு
6 . 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
7. மாவு 1 + 1/2 கப்
8. 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
9. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
10. 1/2 டீஸ்பூன் உப்பு
11. 200 கிராம் சாக்லேட் சிப்ஸ்
அதனை தயாரிக்கும் முறைகள்:
1. ஒரு பெரிய பாத்திரத்தில் வெண்ணெய், காஸ்டர் சுகர் ,மற்றும் ஐசிங் சுகர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக நன்கு அவை கெட்டியாகும் வரை கலக்கவும்.
2 . அந்த பாத்திரத்தில் ஒரு முட்டையை உடைத்து, அந்த முட்டையில் உள்ள மஞ்சள் கருவை சேர்த்து நன்றாக அதில் நன்கு கலக்க வேண்டும்.
3. மேலே உள்ள பொருள்கள் அனைத்தையும் கலக்கிய பின்பு ஒரு சீரான கலவையானது கிடைக்கும் .அதில் அதனுடன் சேர்ந்து மாவு மற்றும் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா மற்றும் சோடா உப்பு ,ஆகியவற்றை நன்கு கலக்க வேண்டும் அதனை குக்கி மாவைப்போல் வரும் வரை, நன்கு கலக்க வேண்டும் .
4. இவற்றை எல்லாம் கலந்த பின்பு இறுதியாக சாக்லேட்டை அதில் சேர்க்க வேண்டும் .இதை நன்றாக மேற்கூறிய கலவையுடன் மிகவும் நன்றாக கலக்க வேண்டும்.
5.இறுதியாக மாவை குளிர்வித்து உருண்டைகளாக வடிவமைக்கவும். இவற்றை பட்டர் பேப்பரில் வைத்து, குக்கீகளை 180 டிகிரி செல்சியஸில் 15-20 நிமிடங்கள் பேக் செய்யவும்.
இவ்வாறு சாக்லேட் சிப் குகீஸ்களை உருவாக்கி சுவைத்து மகிழலாம். நாம் குடும்பத்துடன் ஏதாவது இன்ப சுற்றுலா செல்லும் போதோ,அல்லது காதல் துணையுடன் வெளியே தனியாக செல்லும் பொழுது இது போன்ற சாக்லேட் குக்கீஸ் சுவைக்கும் பொழுது ஒரு புதுவிதமான இன்பத்தை கொடுக்கிறது.
இதனால் மனதில் ஒரு லேசான உணர்வும் மற்றும் ஒருவருக்கொருவர் உள்ளே ஒருவித அன்பும் பரிமாற்றிக் கொள்ளப்படுகிறது. இது பெருமளவில் குழந்தைகளை கவர்ந்து சுவைக்கு அடிமையாக்குகின்ற ஒரு தீனி ஆகும் .
இதனை வெறுப்பதற்கு யாராலும் அவ்வளவு எளிதில் முடியாது. எனவே இதனை சந்தோசத்துடனும் மனநிறைவுடனும் ரசித்து ருசித்து சாப்பிட்டு மகிழ்வோம். நாமும் நமது வீடுகளில் இதை செய்து பார்ப்போம்.