கியா நிறுவனம் தங்களது புதிய SUV கார் மாடலான Sportage என்ற காரை அமெரிக்காவில் வெளியிடுவதற்கான டீசரை வெளியிட்டுள்ளது. கொரிய நிறுவனமான கியாவின் N3 வடிவக் கார்களின் வரிசையில் கியா ஸ்போர்டேஜ் கார் இடம்பெற்றுள்ளது. ஐந்தாவது ஜெனரேஷன் ஸ்போர்டேஜ் SUV கார் மாடலான இது, பல்வேறு நிலப்பரப்புகளில் ஓடும் வகையிலும், நிலத்தில் இருந்து உயர்ந்ததாக அதிக கிரவுண்ட் க்ளியரன்ஸ் வசதி கொண்டிருப்பதோடு, அனைத்து நிலப்பரப்புகளுக்கும் பொருந்தும் டையர்களையும் கொண்டிருக்கிறது. இந்த டீசரில் புதிய சிறப்பம்சம் கொண்ட ஹெட்லைட் கொண்டதாக இந்தக் கார் காட்டப்பட்டிருப்பதுடன், அதில் புலியின் முகத்தைப் போன்ற முன்பக்கமும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


EV6 என்ற கியா நிறுவனத்தின் பிரபலமான கார் மாடலின் கேபினைப் போலவே, ஸ்போர்டேஜ் மாடலிலும் அமைக்கப்பட்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவருக்கு உதவிகரமாகவும், பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் இந்தக் காரின் மாடலில் 12.3 இன்ச் வரையிலான வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய மாடலான ஸ்போர்டேஜ் காரில் டேஷ்போர்டை நேரடியாகக் கட்டுப்படுத்தும் வசதியும் உண்டு. இதன் ஸ்போர்ட்ஸ் தன்மைக்கு வலுசேர்க்கும் வகையில் பல்வேறு புதிய சிறப்பம்சங்களும் இந்த மாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. 



புதிய மாடலான ஸ்போர்டேஜ் காரில் பலமும், ஆற்றலும் வாய்ந்த என்ஜின்கள் பொருத்தப்படும் என கியா நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், SUV மாடலான இந்தக் காரில் முன்பக்க டயர்கள் மட்டும் இயங்கும் வசதியும், அனைத்து டயர்களும் இயங்கும் வசதியும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் புதிதாக ஓட்டுநருக்கு உதவிசெய்யும் வழியிலான மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களும், உயர்தர பொழுதுபோக்கு வசதிகளும் சேர்க்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


ஹைப்ரிட், ப்ளக்-இன் ஹைப்ரிட் ஆகிய இரு வெர்ஷன்களிலும் ஸ்போர்டேஜ் SUV கார் அறிமுகப்படுத்தப்படுவதாக் இவற்றில் 1.6 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட சிலிண்டர் என்ஜின் இடம்பெறும் எனவும் எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. இந்த என்ஜின் பலம் மிக்கதாகவும், சுமார் 177 hp, 195 lb-ft டார்க் ஆகிய ஆற்றல்களைக் கொண்டதாகவும் இருக்கும். இதில் 6 அல்லது 7 கியர்களும், இரட்டை ஆட்டோமேட்டிக் க்ளட்ச் வசதியும் சேர்க்கப்படும். 



லித்தியம் அயன் பேட்டரியுடன் பொருத்தப்பட்டிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார் மூலமாக இந்த மாடலின் என்ஜினுக்கு ஆற்றல் வழங்கப்படும் தொழில்நுட்பம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், இந்த மாடலில் சில உயர் ரக என்ஜின்கள்  2.5 லிட்டர் நான்கு சிலிண்டர்களைக் கொண்டதாகவும், சுமார் 177 hp, 195 lb-ft டார்க் ஆகிய ஆற்றல்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டனவையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் அக்டோபர் 27 முதல், கியா வழங்கும் இந்த அதிநவீன டிசைன் அம்சமும், புதிய ஆற்றல்மிக்கத் தொழில்நுட்பங்களும் கொண்டுள்ள ஸ்போர்டேஜ் SUV கார் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI