தேவையான பொருட்கள்








உலர்ந்த பன்னீர் ரோஜா இதழ்கள் - 6 பூ( பூச்சிக்கொல்லி அடிக்காத பூ)








சர்க்கரை - முக்கால் டேபிள் ஸ்பூன்








தேன் - கால் கப்








வெள்ளரி விதை - 1 டேபிள் ஸ்பூன்








 செய்முறை








சர்க்கரை, ரோஜா இதழ் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ( இவை இரண்டையும் உரலில் சேர்த்து அரைத்து எடுத்தால் குல்கந்து இன்னும் நன்றாக இருக்கும்.) அரைத்த கலவையை கண்ணாடி ஜாரில் சேர்த்து, வெள்ளரி விதையையும் இதனுடன் சேர்க்க வேண்டும். 








இதை ஸ்பூனால் நன்கு கலந்து விட வேண்டும். பின்னர் இதில் தேன் ஊற்றி நன்கு கலக்கவும். 48 மணி நேரம் மூடி போட்டு அப்படியே விட்டு விட வேண்டும். ( அல்லது இதை 5 நாட்கள் வெயிலில் வைத்து காய வைத்து எடுக்க வேண்டும். வெயிலில் காய வைக்கும் போது அவ்வப்போது கிளறி விட வேண்டும். ) அவ்வளவு தான் சுவையான ரோஜா குல்கந்து ரெடி.







ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும், ஸ்பூனால் கலந்து விட்டு எடுத்து சாப்பிட வேண்டும். உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்தினால் குல்கந்து கெடவே கெடாது. 


குல்கந்தின் நன்மைகள் 


குல்கந்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  வைட்டமின் சி நிறைந்துள்ளது.  வைட்டமின் சி பல செல்லுலார் நிலைகளில் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவுகிறது.  இது உடலில் நுழையும் பல்வேறு நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராட உதவுகிறது. எனவே குல்கந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. 

தூக்கத்தை தூண்ட உதவுகிறது. ரோஜா இதழ்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல், அவற்றின் ஹிப்னாடிக் விளைவுகளால் தூக்கத்தைத் தூண்டவும் உதவும் என கூறப்படுகிறது. குல்கந்தில் உள்ள டெர்பீன்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் எத்தில் அசிடேட் ஆகியவை மூளையை ரிலாக்ஸ் செய்ய உதவும் என சொல்லப்படுகிறது. இது தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. 

குல்கந்து சருமத்தை அழகாக பராமரிக்க உதவுகிறது. முகப்பருவைக் குறைப்பது முதல் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பது வரையிலான பண்புகள் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.   வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகளின் அதிக உள்ளடக்கம் காரணமாக. குல்கந்து சருமத்தை உள்ளே இருந்து மேம்படுத்த உதவுகிறது. மேலும் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும் என சொல்லப்படுகிறது. 

குல்கந்தில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால் இது எடை குறைப்பில் முக்கிய பங்காற்றுகிறது. இது உடலின் ஆற்றலை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க 


IPL 2024 Auction LIVE: ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகை; ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கை ரூ. 24.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா